Advertisment

இன்று வெளியாகும் ஒன் பிளஸ் 5டியின் சிறப்புகள் என்ன?

ஒன் பிளஸ் 5டி, மற்ற மாடல்களில் இருந்து வேறுபட்டு 6.01 அங்குல டிஸ்ப்ளே உடன் வெளி வர இருக்கிறது. முழு டிஸ்ப்ளே இருப்பதால் முன் பக்கம் ஹோம் பட்டன் இருக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oneplus-india-amazon

தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஒன் பிளஸ் ஸ்மார்ட் போன் தனது அடுத்த மாடலான ஒன் பிளஸ் 5டி-ஐ இன்று ப்ரூக்ளினில் வெளியிடுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பே ஒன் பிளஸ் 5 மாடலை இந்நிறுவனம் வெளியிட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து ஒரு சில மாற்றங்களுடன் அடுத்த மாடலான ஒன் பிளஸ் 5டி-ஐ வெளியிடுகிறது. இந்த மாடல் போன் இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு வரவிருக்கிறது. அதனை தொடர்ந்து, 4:30 மணிக்கும அமேசானிலும், ஒன் பிளஸ் வலைத்தளத்திலும் வெளியிட உள்ளனர். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

Advertisment

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5ல் இருந்து ஒரு சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் அதில் மிக முக்கியமாக காணப்படும் மாற்றம் போன் டிஸ்ப்ளே. வெளிவந்த செய்தியின் படி, 6 அங்குல டிஸ்ப்ளே உடன், பட்டன்கள் எதுவும் இல்லாமல் முன் பக்கம் முழுக்க திரை மட்டும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதனால் பெரும்பாலும் மற்ற ஸ்மார்ட்போனில் இருப்பது போல் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின் பக்கம் இருக்கலாம்.

ப்ரூக்ளினில் நடை பெறும் இந்த வெளியிட்டு விழாவை பார்க்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஒன் பிளஸ் குழு YouTubeல் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது. மேலும், தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புனே நகரில் இருக்கும் மக்கள் ஒரு சில பிவிஆர் திரை அரங்கில் இதை கண்டுகளிக்கலாம்.

வெளியிட்டு விழா

ஒன் பிளஸ் 5டி வெளியிட்டை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் ஒரு டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. டீசர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அறிவித்தனர். இன்று ப்ரூக்ளின், நியூ யார்க்கில் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது, இந்திய நேரத்தின் படி இரவு 9:30.

இந்தியாவில் விற்பனை மற்றும் விலை

மற்ற மாடல்களை போலவே ஒன் பிளஸ் 5டி-யும் இந்தியாவில் பிரத்தியேகமாக அமேசானில் வெளிவர உள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்கள் நவம்பர் 21 மாலை 4:30 மணியில் இருந்து இந்த போனை முன் பதிவு செய்யலாம். நவம்பர் 28 முதல் ரூ 40,000 க்கு அமேசானில் விற்பனை தொடங்கும், பிரபலாமான ஒன் பிளஸ் 5-ஐ விட ஒரு சில ஆயிரமே அதிகம்.

விழா நேரம் மற்றும் நேர் ஒளிப்பரப்பு

உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் YouTube மற்றும் முக நூல் மூலம் நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை காணலாம். மேலும் தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புனே மக்கள் பிவிஆர் திரை அரங்கில் ரூ 99 டிக்கெட்டை பெற்று வெள்ளித்திரையில் காணலாம்.

குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

ஒன் பிளஸ் 5டி, மற்ற மாடல்களில் இருந்து வேறுபட்டு 6.01 அங்குல டிஸ்ப்ளே உடன் வெளி வர இருக்கிறது. முழு டிஸ்ப்ளே இருப்பதால் முன் பக்கம் ஹோம் பட்டன் இருக்காது. அதனால் பிங்கர் சென்சார் பின்பக்கம் அமையும்.

மேலும் செல்பி கேமெராவில் சில முன்னேற்றங்கள் வரலாம் என எதிர் பாக்கப்படுகிறது. ஒன் பிளஸ் 5 போல இதிலும் இரண்டு பின் பக்க கேமெராக்கள் இருக்கிறது, 16+ 20 மெகா பிக்ஸல் ஆகும். குறைந்த வெளிச்சத்தில் சிறந்த புகைப்படம் எடுக்க இரண்டாவது லென்சில் f/1.7 துளை மாற்றம் இருக்கும்.

Octa-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலியை கொண்டுள்ளது, ஒன் பிளஸ் 5 போலவே இரண்டு வகையில் வரவிருக்கிறது. அதாவது, ஒன்று 6ஜிபி RAM மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றொன்று 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி. மேலும் இது ஆக்ஸிஜன் OS மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 கொண்டுள்ளது.

ஒன் பிளஸின் மற்ற மாடல்கள் போல் இதிலும் வெளியில் எடுக்க முடியாத பேட்டரியும், டாஸ் சார்ஜ் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. 162 கிராம் எடையுடன் 156.1 x 75 x 7.3 மில்லி மீட்டர் அளவில் இந்த ஸ்மார்ட்போன் அமையும்.

Oneplus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment