Advertisment

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5 வித்யாசம் என்ன?

ஒன் பிளஸ் 5யின் விலை தான். சாம்சங் மற்றும் ஆப்பிளுடன் ஒப்பிட்டால் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயர் தரமான ஸ்மார்ட்போன் இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oneplus5t_big_4

ஒன் பிளஸ் 5டி வெளியிட்டு விழா நேற்று வெற்றிகரமாக நியூ யார்க்கில் நடந்து முடிந்தது. முடிந்த அளவு பல மாற்றங்களை ஒன் பிளஸ் நிறுவனம் இந்த மாடலில் ஏற்படுத்தியுள்ளது. 18:9 விகிதம் டிஸ்ப்ளே திரை, அதிக பேட்டரி, பேஸ் அன்லாக் போன்ற சிறந்த இணைப்புகளோடு ஒன் பிளஸ் 5டி வெளிவந்துள்ளது. இருப்பினும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஒன் பிளஸ் 5யுடன் ஒப்பிட்டு பார்போம்.

Advertisment

நிச்சயம் ஒன் பிளஸ் 5டி அதிகம் பிரபலம் அடைந்த ஒன் பிளஸ் 5யை விட மேம்படுத்தப்பட்ட பதிப்பு தான் என்றாலும். ஒன் பிளஸ் 5 பயனாளர்கள் இந்த புதிய மாடலை வாங்கும் அளவிற்கு தகுதி பெற்றதா?

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5: வடிவமைப்பு மற்றும் திரை

இந்த இரண்டு கைபேசிகளின் வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றமும் வரவில்லை. ஒரே மாதிரியான தோற்றம், அளவு மற்றும் வடிவம். கேமராவில் தொடங்கி, சார்ஜ், ஹெட் போன், சிம், ஸ்பீக்கர் என அனைத்து ஒரே மாதிரிதான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டும் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு கொண்டது அல்ல. வடிவமைப்பில் நாம் கவனிக்க கூடிய ஒரு மாற்றம் பிங்கர் சென்சார் ஒன் பிளஸ் 5டியில் பின் பக்கம் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து டிஸ்ப்ளே திரை அங்குலம் ஒன் பிளஸ் 5டியில் பெரியதாக உள்ளது. ஒன் பிளஸ் 5, 5.5 (1920 x 1080) அங்குலம் தான். ஆனால் ஒன் பிளஸ் 5டி 6 (2160 x 1080) அங்குலம் ஆகும். 16:9 திரை அளவு 18:9 திரை அளவாக ஒன் பிளஸ் 5டியில் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரியதாக எந்த மாற்றும் இல்லை, வீடியோ மற்றும் மற்ற உள்ளடக்கத்தை அதிகம் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் ஆப்-ல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5: மென்பொருள் மற்றும் வன்பொருள்

இரண்டு மாடலும் அண்ட்ராய்ட் 7.1 நோகட் கொண்டு ஆக்ஸிஜன் osயில் தான் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இரு கைபேசிகளுக்கும் ஒன்றாக அண்ட்ராய்ட் ஓரியோ அப்டேட் விடப்படும். os பொறுத்தவரை இரண்டு கைபேசிகளிலும் எந்த மாற்றமும் கிடையாது.

ஒன் பிளஸ் 5டி மற்றும் ஒன் பிளஸ் 5 இரண்டுமே சனாப்டிராகன் 835 செயலி மற்றும் அட்ரினோ 540 GPUவில் இயங்குகிறது. அதே போல் 6 மற்றும் 8 ஜிபி RAMல் வருகிறது. ஒன் பிளஸ் 5, மிக வேகமாக எந்த தடையும் இன்றி வேலை செய்கிறது. அதே வன்பொருளை கொண்டுள்ள ஒன் பிளஸ் 5டியும் அதே போல் தான் அமையும். எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது.

இதே தான் பேட்டரிக்கும், இரு கை பேசிகளும் 3300mAh தான், ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிலைத்து நிற்கும். டாஸ் சார்ஜர் என்பதால் வெகு விரைவில் பேட்டரி சார்ஜ் ஆகி விடும்

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5: கேமரா மற்றும் பேஸ் அன்லாக்

ஒன் பிளஸ் குழு கேமிராவில் தான் கவனிக்க கூடிய மாற்றங்களை செய்துள்ளது. இரு கைபேசிகளிலும் 16 மற்றும் 20 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை பின் பக்க கேமரா தான். அதே போல் 16 மெகா பிக்ஸல் முன் கேமரா. ஆனால் ஒன் பிளஸ் 5டியில் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகை படம் எடுக்க f / 1.7 துளை அமைத்துள்ளது. குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகை படம் ஒன் பிளஸ் 5யில் அவ்வளவு சிறப்பாக இல்லை, எனவே இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

ஒன் பிளஸ் 5யில் முதல்முதலாக “portrait” மோடை ஒன்பிளஸ் அறிமுகம் படுத்தியது. தற்போது ஒன் பிளஸ் 5டியில் அது மேம்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் விளக்குகிறது. ஐபோன் 7 பிளஸ் உடன் ஒப்பிடும் பொது ஒன் பிளஸ் 5யின் “portrait” படம் சற்று குறைவாகவே இருந்தது. அதனால் மென்பொருளில் ஒரு சில மாற்றங்களை ஒன் பிளஸ் 5டியில் கொண்டு வந்துள்ளனர்.

பிங்கர் பிரிண்ட் மற்றும் முகம் மூலம் இந்த போனை அன்லாக் செய்யலாம். ஐ போன் x போல் பேஸ் அன்லாக்கை ஒன் பிளஸ் கொண்டு வந்துள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறது என்பதை பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும்.

ஒன் பிளஸ் 5டி, ஒன் பிளஸ் 5: முடிவு

ஒன் பிளஸ் 5டி, 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பில் ரூ.32,999 மற்றும் ரூ. 37,999யில் கிடைக்கும். ஏறக்குறைய ஒன் பிளஸ் 5யின் விலை தான். சாம்சங் மற்றும் ஆப்பிளுடன் ஒப்பிட்டால் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயர் தரமான ஸ்மார்ட்போன் இது. ஒன் பிளஸ் 5 பயனாளர்களுக்கு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் ஒன் பிளஸ் 3 அல்லது 3டி உரிமையாளர்களுக்கு நிச்சயம் அடுத்த அப்டேடட் ஸ்மார்ட்போன் ஒன் பிளஸ் 5டி.

Android
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment