Advertisment

ஒன்பிளஸ் போனில் அறிமுகமாகும் செல்பி போர்ட்ரைட்!

இந்த செல்பி போர்ட்ரைட் அம்சம் மிகச் சிறந்த ஒன்றாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒன்பிளஸ் போனில் அறிமுகமாகும் செல்பி போர்ட்ரைட்!

வெகு நாட்களாக நாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒன்பிளஸ் 6ன், ஆக்ஸிஜன் இயங்குதளம் 5.1.6த்தின் ஓவர்-தி-ஏர் (Over-the-air (OTA)) அப்டேட் நிறைய அம்சங்களை நமக்கு அளித்திருக்கின்றது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் செல்பி போர்ட்ரைட். ஒன்பிளஸ் 6 போனை சந்தையில் அறிமுகப்படுத்திய அன்றே, இது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுருந்தது அதன் நிர்வாகம். இந்த அப்டேட்டிற்கு முன்பு வரை போர்ட்ரைட் அம்சம் போனின் பின்பக்க கேமராவில் மட்டுமே இருந்தது. ஆக்ஸிஜன் இயங்குதளம், ஒன்பிளஸ் போனில் இருந்த தொழில்நுட்ப பிழைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Advertisment

ஆக்ஸிஜன் இயங்குதளம் 5.1.6 அப்டேட்டானது, ஐடியா 4ஜி நெட்வொர்க்கினை இந்த அலைபேசியில் உபயோகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, இரண்டு சிம்கார்டுகளிலும் 4ஜி நெட்வொர்க்கினை உபயோகித்தல், அலைபேசி சேவையினை மேம்படுத்துதல், பேட்டரியில் இருக்கும் சார்ஜ் பற்றிய விபரத்தினை அறிய தொடுதிரையில் இருக்கும் ஸ்டேட்டஸ் பார் என எண்ணாற்ற புதிய அம்சங்களை வெளியிட்டுருக்கின்றது இந்த இயங்குதளம்.

இந்த அம்சங்களில் மிக முக்கியமானது செல்பி போர்ட்ரைட் தான். எங்களுக்கு இயங்குதள அப்டேட் மிக விரைவில் கிடைத்திடவே, நாங்கள் செல்பி போர்ட்ரைட் அம்சத்தினை சோதித்துப் பார்த்தோம்.

செல்பி போர்ட்ரைட் என்றால் என்ன?

ஒரு போனில் மிக முக்கியமான அம்சமாக நாம் நினைப்பது செல்பி எடுக்கும் போது நாம் அழகாக தெரிகின்றோம் என்பது தான். எவ்வளவு விலை கொடுத்து ஒரு போனை வாங்கினாலும் நமக்கு தேவையான ஒன்றாக செல்பியும் முகப்பு கேமராவும் மாறி வெகு நாட்களாக ஆகிவிட்டது. ஸ்மார்ட்போனை வடிவமைக்கின்றவர்கள், செல்பி எடுக்கும் போது முகம் மற்றும் தெளிவாகவும், நமக்குப் பின்னால் இருக்கும் பேக்கிரவுண்ட், அவுட் லைன் ஆகியவற்றை பிளர் செய்து நேர்த்தியான செல்பியினை நமக்கு அளிக்கும் வகையில் இருக்கும் அம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆரம்ப காலங்களில் போர்ட்ரைட் அம்சம் என்பது வெகு சில போன்களில் மட்டுமே இருக்கும். அதுவும் இரட்டை முகப்பு கேமராக்களுடன் கூடிய டெலிபோட்டோ மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இருக்கும் போன்களில் மட்டுமே இந்த அம்சம் இருந்து வந்தது. ஆனால் அனைத்து கம்பெனிகளும் இரண்டு முகப்பு கேமராக்களுடன் கூடிய போன்களை அறிமுகம் செய்வதில்லை. ஆனால் இந்த போர்ட்ரை மோட் அனைத்தையும் மாற்றி சென்றிருக்கின்றது என்று கூறலாம். இந்த புதிய அப்டேட்டினால் மேற்கூறிய நேர்த்தியான செல்பியினை எடுக்கலாம்.

போர்ட்ரைட் செல்பி எப்படி வேலை செய்கின்றது?

ஒன்பிளஸ் கேமராவில் வீடியோ, போட்டோ, மற்றும் போர்ட்ரைட் என்ற மூன்று அம்சங்கள் இருக்கின்றன. போர்ட்ரைட் மோடில் இருக்கும் செல்பி ஆப்ஷனை பயன்படுத்தி இப்போது புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்த போர்ட்ரைட் மோடில் உங்களுக்கு பின்னால் இருக்கும் பேக்ரவுண்ட் ஏரியா முற்றிலுமாக பிளர் செய்யப்பட்டு நீங்கள் மட்டுமே உங்கள் செல்பியில் தெரிவீர்கள். தெளிவான செல்பி வேண்டுமெனில் உங்களுக்கு பின்னால் பேக்ரவுண்ட் என ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சுவருக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்தால் அதில் அத்தனை தெளிவான போர்ட்ரைட் கிடைக்காது. உங்களின் செல்பியில் நீங்கள் மட்டும் தெரியவேண்டுமெனில் ஒன்பிளஸ் என்பது மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

இந்த செல்பி போர்ட்ரைட் அம்சம் மிகச் சிறந்த ஒன்றாகும். . என்னுடைய முடி, காதுகளின் ஓரம் என அனைத்தும் பிளர் ஆகியிருக்கின்றது. இந்த மென்பொருள் ஒரு நபரின் அவுட்லைனை சரியாக உணர்ந்து செயல்படும் அளவிற்கு துல்லியமாக இல்லை.

மேலும் ஒரு போர்ட்ரைட் செல்பியில் எத்தனை பேர் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ள முடியும் என்பதிலும் குழப்பம் இருக்கின்றது. மிக அருகில் இருவர் நின்று கொண்டிருந்தால் புகைப்படம் தெளிவாக இருக்கின்றது. கொஞ்சம் தொலைவில் நின்றால் போர்ட்ரைட் செல்பியில் பின்னால் இருக்கும் நபர் பிளர் ஆகிவிடுவார். இதனால் சில இடங்களில் இந்த மென்பொருள் குழப்பான முறையில் செயல்படுகின்றது. ஒரு செல்பியில் ஒருவர் மற்றும் நின்றால் புகைப்படம் தெளிவாக கிடைக்கின்றது. ஒன்பிளஸ் மேலும் பல்வேறு மாற்றங்களை இந்த செல்பி போர்ட்ரை மென்பொருளில் கொண்டுவரும் என்று நம்புவோம்.

One Plus 6
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment