Advertisment

Oppo நிறுவனத்தின் ப்ரீமியம் போன் Oppo R17 Pro டிசம்பர் 4ல் அறிமுகம்

மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ள இந்த போனின் விலை 43 ஆயிரம் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oppo R17 Pro triple cameras release on December 4

Oppo R17 Pro triple cameras release on December 4

Oppo R17 Pro :  இப்போதெல்லாம் மூன்று பின்பக்க கேமராக்கள் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் ட்ரெண்டாகி வருகின்றன. ஹூவாய் மேட் 20 ப்ரோ போனைத் தொடர்ந்து ஓப்போவும் மூன்று பின்பக்க கேமராவுடன் வெளியாக உள்ளது.

Advertisment

மேலும் படிக்க : ஹூவாய் மேட் 20 ப்ரோ போன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

இந்த போன் ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் வெளியானது. தற்போது இந்தியாவில் வெளியாக உள்ளது. ப்ரீ புக்கிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து புக் செய்து கொள்ளலாம்.

சீனாவில் இந்த போனின் விலை 4,299 யுவான் ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 43,000க்கும் மேலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி RAM மற்றும் 128 GB சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை இதுவாகும்.

Oppo R17 Pro  சிறப்பம்சங்கள்

மூன்று பின்பக்க கேமராவுடன் வருகிறது இந்த போன். டிஸ்பிளேவிற்குள் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் திரை நோட்ச்சுடன் கூடிய வாட்டர்ட்ராப் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

157.6mm x 74.6mm x 7.9mm என்ற அளவீடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இதன் எடை 183 கிராம் ஆகும்.

6.4 இன்ச் அளவு கொண்டுள்ள இந்த போன் ஃபுல் ஹெச்.டி திரையைக் கொண்டுள்ளது.

ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ 19:9 இன்ச் ஆகும். ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகப்பட்ட ColorOS 5.2 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரில் இயங்குகிறது இந்த போன்.

Oppo R17 Pro கேமராக்கள்

இதன் செல்பி கேமராவின் செயல் திறன் 25 எம்.பி ஆகும்.

12 எம்.பி ப்ரைமரி கேமராவில் இரண்டு விதமான அப்பேச்சர்கள் ( f/1.5 and f/2.4 ) கொண்டுள்ளன.

இரண்டாம் கேமரா 20MP லென்ஸையும், Time of Flight தொழில்நுட்பம் மற்றும் 3D ஸ்டீரியோ தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ள மூன்றாவது கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியின் செயல் திறன் 3,700mAh ஆகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment