Advertisment

பான்-ஆதார் எண் இணைப்பு காலக்கெடு: அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to link pan - aadhaar, how to link pan - aashaar online, PAN-Aadhaar linking, PAN-Aadhaar linking deadline extended, பான்-ஆதார் எண் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு, பான் எண், ஆதார் எண்

how to link pan - aadhaar, how to link pan - aashaar online, PAN-Aadhaar linking, PAN-Aadhaar linking deadline extended, பான்-ஆதார் எண் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு, பான் எண், ஆதார் எண்

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2021: பான்-ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல வாரங்களாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிக அளவிலான எண்ணிக்கையில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் பல நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்திய டிஜிட்டல் தளங்களில் சீனா எவ்வாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது?

இதற்கிடையில் தற்போது பான் ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம், ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரப்பூரவமாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

How to Link Pan Card to Aadhar Card Online: ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைப்பது எப்படி?

இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக பான்-ஆதார் எண்களை இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம்.

முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லுங்கள். அதில் ஆதாரையும் பான் கார்டையும் இணைக்கும் ஆப்ஷனுக்கு செல்லவும்

அதில் பான் எண் மற்றும் ஆதார் எண் பதிவிடவும்.

உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் அதே பெயரை பதிவிடவும்

ஒருவேளை உங்கள் ஆதார் எண்ணில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால் டிக் பட்டனை கொடுக்கவும்

கேப்சா கோட் ஒன்று தோன்றும். அதை டைப் செய்யவும்

பின்னர் லிங்க் ஆதார் என்று கொடுக்கவும்.

அவ்வளவு தான் உங்களில் பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Pan Card Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment