Advertisment

புத்தம் புதிய போகோ எம்3 ப்ரோ 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

Poco M3 Pro 5g launched in India price sale date specifications அறிமுகத்தின் ஒரு பகுதியாக, இரண்டு மாடல்களும் ரூ.13,499 மற்றும் ரூ.15,499 விலைக்கு விற்கப்படும்.

author-image
WebDesk
New Update
Poco M3 Pro 5g launched in India price sale date specifications Tamil News

Poco M3 Pro 5g launched in India price sale date specifications Tamil News

Poco M3 Pro 5g launched in India price sale date specifications Tamil News : போகோ எம் 3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.13,999. மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப்செட், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு ஆகியவை இந்த புதிய இடைப்பட்ட தொலைப்பேசியின் முக்கிய சிறப்பம்சங்கள்.

Advertisment

இந்தியாவில் போகோ எம் 3 ப்ரோ 5 ஜி விலை, விற்பனை தேதி

போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி-ன், 4 ஜி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,999. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.15,999 செலவாகும். அறிமுகத்தின் ஒரு பகுதியாக, இரண்டு மாடல்களும் ரூ.13,499 மற்றும் ரூ.15,499 விலைக்கு விற்கப்படும். இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகை மற்றும் ஜூன் 14 அன்று மட்டுமே பொருந்தும். அதன் பிறகு நீங்கள் சாதனத்தை அசல் விலையில் பெறுவீர்கள். புதிய போக்கோ தொலைப்பேசி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.

போக்கோ எம் 3 ப்ரோ விவரக்குறிப்புகள், அம்சங்கள்

போக்கோ எம் 3 ப்ரோ 5ஜி, 6.5 இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், முழு எச்டி + ரெசல்யூஷன் மற்றும் டைனமிக் ஸ்விட்ச் ஆகிய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹூட்டின் கீழ், மீடியா டெக் டைமன்சிட்டி 700 செயலி உள்ளது. இது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு, பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில், 48 எம்.பி முதன்மை கேமரா f/1.79 துளை மற்றும் 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.0 துளை கொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. முன் கேமரா ஒரு வட்ட கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு, போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி-ல், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது AI Face Unlock-க்கும் ஆதரவை வழங்குகிறது.

இணைப்பைப் பொறுத்தவரை, இந்த சாதனம் இரட்டை சிம் ஸ்லாட்ஸ், 5 ஜி, என்எப்சி, இரட்டை-பேண்ட், வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Poco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment