scorecardresearch

செம்ம மாடல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. விலை கம்மி.. போகோ எக்ஸ்5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

போகோ எக்ஸ்5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலைகள் ரூ.18,999-ல் இருந்து தொடங்குகின்றன.

Poco X5 5G price in India starts at Rs 18999
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மாடல் ரூ.20999க்கு கிடைக்கிறது.

Poco X5 5G இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பதிப்பின் விலை ரூ.18,999 இல் தொடங்குகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மாடல் ரூ.20999க்கு கிடைக்கிறது. இதில் பிளிப்கார்ட்டில் பல்வேறு ஆபர்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ரூ. 2,000 தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள் என்று Poco தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 2,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும் நிறுவனம் வழங்கும் என்று அது மேலும் கூறுகிறது.
புகைப்படம் எடுப்பதற்கு, X5 5G பின்புறத்தில் 48MP அகலம், 8MP அல்ட்ராவைடு மற்றும் மற்றொரு 2MP டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 16MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Poco x5 5g price in india starts at rs 18999