Advertisment

"வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்" மோடி குறிப்பிட்ட பப்ஜி கேம் : சில சுவாசிய தகவல்கள்...

Pubg online video game interesting facts : சீனாவில் இருக்கும் ஸ்டுடியோ லைட்ஸ்பீட் மற்றும் குவாண்டம் என்ற நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pubg online video game

Pubg online video game

Pubg online video game interesting facts : பப்ஜி கேம்... தற்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும், விளையாடப்பட்டு வரும் ஆன்லைன் கேம் இது. சமீபத்தில் டெல்லியில் நடந்த பரிக்‌ஷா பர் சர்ச்சா 2.0 என்ற நிகழ்ச்சியில், மோடியே பப்ஜி பற்றி பேசும் அளவிற்கு பிரபலமாகி வருகிறது பப்ஜி. ஆனால் இந்த விளையாட்டைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்றால் பதில் இல்லை தான்.

Advertisment

Pubg online video game interesting facts

பப்ஜி என்பது ப்ளேயர் அன்நோன்ஸ் பேட்டில் கிரவுட்ண்ட் என்பதன் சுருக்கம் தான் பப்ஜி (PlayerUnknown's Battlegrounds). பிரேண்டன் கீரின் என்ற வடிவமைப்பாளர் 2000ம் ஆண்டில் வெளியான ஜப்பானிய மொழிப்படமான பேட்டீல் ராயல் என்ற திரைப்படத்தை அடிப்படையாக வைத்து பப்ஜி கேமை உருவாக்கினார்.

முதலில் கம்ப்யூட்டரில் மட்டுமே விளையாடும் விளையாட்டாக வெளியான பப்ஜி அதன் பின்பு ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடப்படும் விளையாட்டாக உருமாற்றம் பெற்றது. பாராச்சூட்டில் இருந்து தீவு ஒன்றிற்கு வரும் 100 வீரர்களை களமாக கொண்டிருக்கும் விளையாட்டு இந்த பப்ஜி.

விளையாட்டில் நேரம் செல்ல செல்ல, விளையாடுபவரின் மேப் சிறிதாகிக் கொண்டே சென்று, அடுத்த இடத்திற்கு வெளியேறச் சொல்லி உத்தரவிடும். அதனை செய்யாவிட்டால் இறுதியில் கேம் ஓவர்.

இந்த விளையாட்டின் இறுதி வரை நின்றிருக்கும் கேமர் நீங்கள் தான் என்றால் “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்” என்று க்ரீட்டிங் செய்யும் பப்ஜி.

இந்த விளையாட்டு வெளியானதில் இருந்து 200 மில்லியன் டவுன்லோட்கள் நடைபெற்றுள்ளது. தினமும் 30 மில்லியன் நபர்கள் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.

பேட்டில் ராயல் என்ற பெயரில் பி.சி.களிலும் எக்ஸ் பாக்ஸிலும் தான் முதலில் அறிமுகமானது பப்ஜி.

சீனாவில் இருக்கும் ஸ்டுடியோ லைட்ஸ்பீட் மற்றும் குவாண்டம் என்ற நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் 9ம் தேதி, 2018ம் ஆண்டு சீனாவில் இந்த விளையாட்டு அறிமுகமானது. பின்பு உலகம் எங்கிலும் ஒரு மாதம் கழித்து வெளியானது இந்த கேம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் இந்த விளையாட்டை அதிக நபர்கள் விளையாடி வருகிறார்கள்.

டென்செண்ட் நிறுவனம் இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்தியதோடு 50 லட்ச ரூபாய் பரிசுப் போட்டி ஒன்றையும் நடத்தியது. அதில் மும்பையைச் சேர்ந்த டெரிஃபையிங் நைட்மேர்ஸ் என்ற குழு பரிசினை வென்றது.

ஆயிரம் இருந்தாலும் தற்போது குஜராத் பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்... காரணம் என்ன தெரியுமா ?

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment