Advertisment

“உலக தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக” - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரியல்மீ

சாம்சங்கின் ISOCELL GW1 என்ற 64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme X2 Pro supports SuperVOOC flash charge

Realme X2 Pro supports SuperVOOC flash charge

Realme 64MP quad-camera smartphone : 64 எம்.பி. கேமராவுடன் களம் இறங்க காத்திருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன். ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது 64 எம்.பி. கேமராவுடன் கூடிய ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன். உலகின் முதல் 64 எம்.பி. க்வாட் கேமரா டெக்னாலஜியுடன் வெளியாகும் போன் இது தான் என்று ரியல்மீ நிறுவனம் இந்த கேமராவிற்கு டீசர் வேறு வெளியிட்டுள்ளது.

Advertisment

Realme 64MP quad-camera smartphone

இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற 8ம் தேதி, இந்திய தலைநகர் புதுடெல்லியில் அறிமுகமாக உள்ளது. இந்த 64 எம்.பி. கேமராவை தயாரித்து வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம். ISOCELL GW1 இது தான் அந்த கேமரா சென்சாரின் பெயர். இந்த சென்சார் 48Mp ISOCELL Bright GM2 சென்சாருடன் கடந்த மே மாதம் தான் வெளியானது.

மேலும் படிக்க :  இந்தியாவிற்கு மீண்டும் வரும் எச்.டி.சி. சவால்களை சமாளிக்குமா?

சோனியின் IMX586 சென்சாருடன் சமீப காலமாக நிறைய ஸ்மார்ட்போன்கள் 48 எம்.பி. கேமராவுடன் வலம் வந்த நிலையில், அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது ஸ்மார்ட்போன்களுக்கான கேமரா உலகம். ரியல்மீ மிகவும் தெளிவாக இந்தியாவில் முதல் அறிமுகத்தினையும், சீனாவில் இரண்டாம் அறிமுகத்தினையும் முடிவு செய்துள்ளது.

ரியல்மியை தொடர்ந்து ரெட்மீ நிறுவனமும் விரையில் 64 எம்.பி. கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெரிய போட்டியே ஸ்மார்ட்போன் சந்தையில் நடைபெறுகின்ற நிலையில், சியோமியின் இடத்தை பிடிப்பதில் அனைத்து நிறுவனங்களும் மிகவும் கவனமாக இருக்கிறது.

வெளியான இரண்டாம் காலாண்டுக்கான ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் வழக்கம் போல் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது சியோமி நிறுவனம். இரண்டாவது இடத்தில் சாம்சங் நிறுவனமும், மூன்றாவது இடத்தில் விவோவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி!

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment