Advertisment

ரியல்மியின் புதிய ”கேட்ஜெட்”... நம் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் நிறுவனம்!

Realme : இந்த கேட்ஜெட்களோடு நின்றுவிடாமல் ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைலிலும் அதிக கவனம் செலுத்துகிறது ரியல்மீ நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme fitness band coming on March 5

Realme fitness band coming on March 5

ரியல்மீ நிறுவனம் தங்களுடைய எல்லைகளை வெறும் ஸ்மார்ட்போன்களுக்குள் மட்டும் சுருக்கி வைத்துக் கொள்ளாமல் புதுப்புது கேட்ஜெட்களை அறிமுகம் செய்து வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஏற்கனவே ரியல்மீ டிவி, ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகியவை வந்த நிலையில் தற்போது புதிதாக ஃபிட்னஸ் பேண்டினையும் வெளியிட உள்ளது. ரியல்மீ வருகின்ற மார்ச் 5ம் தேதி தங்களுடைய முதல் ஃபிட்னஸ் பேண்டினை இந்தியாவில் வெளியிட உள்ளது. ஸ்மார்ட்வாட்ச்கள், டிவிகள், ஆடியோ ப்ரோடெக்ட்கள் ஆகியவை வெளியாகின்ற அதே சமயத்தில் இந்த ப்ரோடெக்ட்டும் வெளியாகிறது.

Advertisment

இந்த கேட்ஜெட்களோடு நின்றுவிடாமல் ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைலிலும் அதிக கவனம் செலுத்துகிறது ரியல்மீ நிறுவனம். லக்கேஜ் பேக், டி ஷர்ட்கள் மற்றும் பல்வேறு தினத்தேவைகளுக்கான ப்ரோடெக்ட்கள் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது இந்த நிறுவனம். சியோமிக்கு சரியான போட்டியாக இந்திய சந்தையில் கோலூச்ச நினைக்கிறது ரியல்மீ.

ஏற்கனவே தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பட்ஸ் ஏர் என்ற இயர் போன்களை கடந்த ஆண்டே வெளியிட்டது இந்நிறுவனம். அதுவும் ரூ. 3999 என்ற விலைக்கு. இந்ஹ்ட வருடமும் இதே போன்று பேசிக் இயர் போன்கள், டி.டபிள்யூ.எஸ் இயர்பட்ஸ் மற்றும் ஏ.என்.சி. இயர்போன்கள் ஆகியவற்றை வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது இந்த நிறுவனம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment