செல்ஃபி ப்ரியர்களுக்காகவே வெளியாகிறது இந்தியாவின் செல்ஃபி ப்ரோ Realme U1

25 எம்.பி IMX 576 சோனி நிறுவனத்தின் கேமரா சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Realme U1 India’s selfie Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மீயின் யூ1 ஸ்மார்ட் போன். இந்தியாவின் செல்ஃபி ப்ரோ என்ற டேக்குடன் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட் போன். இன்று மதியம் சரியாக 12.30 மணிக்கு புது டெல்லியில் இந்த போனின் அறிமுக விழா நடத்தப்பட்டது.

அமேசானில் ஏற்கனவே இந்த மொபைலிற்காக நோட்டிஃபை மீ என்ற பக்கத்தை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 5ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த போன்கள்.

மேலும் படிக்க : இண்டெர்நெட் டெலிபோனி கால்கள் செய்யும் சேவையை அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் 

Realme U1 India’s selfie Pro – ன் சிறப்பம்சங்கள்

ரியல்மீயின் யூ சிரியஸ்ஸில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ஆஃப்லைனில் வெளியாகுமா என்பது குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மீடியாடெக் ஹெலியோ பி70 ப்ரோசசரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 12nm FinFET வடிவமைப்புடன் உருவக்கப்பட்ட ஆக்டா கோர் ப்ராசசர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி திரையுடன் கூடிய ட்யூட்ராப் ஸ்கிரீன் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 90.8 % ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது. பேட்டரி சேமிப்புத் திறன் 3500 mAh ஆகும்.  2.5D ரவுண்ட் எட்ஜெசெஸ் மற்றும் லைட் பில்லர் டெக்னாலஜி கொண்டு இதன் புறத்தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Realme U1 India’s selfie Pro -ன் ஸ்டோரேஜ் மற்றும் விலை

விலை : 15000க்கும் குறைவான பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமாக இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

3 ஜிபி RAM-உடன் கூடிய 32 ஜிபி internal Storage வேரியண்ட்டின் விலை 11,999 ஆகும்.

4 ஜிபி RAM-உடன் கூடிய 64 ஜிபி internal Storage வேரியண்ட்டின் விலை 14,499 ஆகும்.

சலுகைகள்

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ் பேக் பெறலாம். ரூ. 5750 மதிப்பிலான 4.2 டிபி டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

கேமரா

இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 13 எம்.பி மற்றும் 2 எம்.பி செயல் திறன்கள் கொண்ட லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. போர்ட்ரைட் லைட்டிங் மற்றும் ஸ்லோ மோசன், பூக் எஃபெக்ட் மற்றும் ஏ.ஐ. சீன் டிடெக்சன் போன்ற அம்சங்கள் உங்களின் புகைப்படக் கலையை அடுத்த அளவிற்கு எடுத்துச் செல்லும்.

செல்ஃபி கேமரா

இந்தியாவின் செல்ஃபி ப்ரோ என்ற டேக்குடன் வெளியாகியுள்ளது இந்த போன். இந்த போனின் ஹைலைட் பாய்ண்ட்டே இது தான்.  25 எம்.பி IMX 576 சோனி நிறுவனத்தின் கேமரா சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடைய அபெர்ச்சர் f/2.0
1.8 மைக்ரோ மீட்டர் லார்ஜ் பிக்சல்
மல்டி ஃப்ரேம் என். ஆர்
நைட் ஷாட் பிரைட்னெஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது இந்த போன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close