Advertisment

குறைந்த விலையிலும் பெஸ்ட் போன் எது? Redmi 9, Redmi 9A பற்றி அலசல்

Redmi 9, redmi 9A mobile phones price, features: Redmi 9A மிகவும் விலை குறைவானதாக கிடைக்கும். இவை இரண்டும் Android 10 MIUI 11 ல் இயங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
redmi 9, redmi 9a, redmi 9 vs redmi9a, redmi 9 specifications camera, redmi 9a specifications camera, redmi 9 price, redmi 9a price, redmi 9a launch, xiaomi redmi phone news, xiaomi redmi phone news in tamil, xiaomi redmi phone latest news, xiaomi redmi phone latest news in tamil

redmi phone tamil news Xiaomi Redmi 9 redmi 9A best mobile phone price features- ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ஸியாமி ரெட்மி, பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது

Redmi Phone Tamil News: பல ஆண்டுகளாக குறைந்த விலை ஸ்மார்ட் கைபேசி சந்தையில் Xiaomi’ன் Redmi தொடர் கைபேசிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. Redmi 9 மற்றும் Redmi 9A ஆகிய இரண்டு கைபேசி மாடல்களும் ரூபாய் 10,000/- க்கு குறைவான மற்றும் அதற்கு சற்று அதிகமான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் Redmi 9A மிகவும் விலை குறைவானதாக கிடைக்கும். இவை இரண்டும் Android 10 MIUI 11 ல் இயங்கும். இருப்பினும் நீங்கள் Redmi 9A ஐ தேர்வு செய்யும் போது பல்வேறு அம்சங்களை இழக்க நேரிடும்.

Advertisment

Redmi 9, redmi 9A mobile phones:  கைபேசிகள் இடையேயான ஒரு ஒப்பீடு

Redmi 9 மற்றும் Redmi 9A ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே இரண்டு கைபேசிகளிலும் 20:9 aspect ratio உடன் கூடிய 6.53-inch IPS LCD dot drop டிஸ்ப்ளே உள்ளது. எனினும் Redmi 9 ஐ விட Redmi 9 A ல் Pixel Per Inch (PPI) மற்றும் resolution ஆகியவை அதிகம் என்பதால் டிஸ்ப்ளே துல்லியமாக இருக்கும். Redmi 9 மற்றும் Redmi 9 A வில் முறையே 269 PPI மற்றும் 335 PPI உள்ளது. Redmi 9’ன் ஸ்கிரீன் resolution 1080 x 2340 pixels அதே நேரம் Redmi 9 A வின் ஸ்கிரீன் resolution 720 x 1600 pixels ஆகும். இந்த விலை வரம்பில் எதிர்பார்த்தபடி, இரண்டு கைபேசிகளிலும் நிலையான 60 Hz refresh rate உள்ளது.

இரண்டு கைபேசிகளிலும் பிளாஸ்டிக்கிலான பின்பகுதி உள்ளது அதுவும் இந்த விலை பிரிவில் எதிர்பார்க்கப்பட்டது தான். Redmi 9A ல் fingerprint scanner இல்லை அதேசமயம் Redmi 9 ல் பின்பகுதியில் கேமராவின் கீழ் பகுதியில் fingerprint scanner உள்ளது.

Redmi 9 vs Redmi 9A: Processor

Redmi 9 ல் dual plus hexa core MediaTek Helio G80 processor உடன் இணைந்து 3GB/4GB RAM மற்றும் 32GB/64GB உட்புற சேமிப்பு (internal storage) வசதி உள்ளது. இந்த உட்புற சேமிப்பு வசதியை MicroSD card மூலம் 512 GB வரை விரிவாக்கம் செய்துக் கொள்ளலாம். Redmi 9 A ல் புதிய octa-core MediaTek Helio G25 SoC processor, அதோடு இணைந்து 3GB RAM மற்றும் 32GB internal storage வசதி உள்ளது. இதுவும் MicroSD card மூலம் விரிவாக்கம் செய்யக்கூடியது. இரண்டு கைபேசிகளிலும் 3.5 mm headphone jack உள்ளது இந்த சிறப்பு வசதி இன்றைய நாட்களில் அறிமுகம் ஆகக் கூடிய பெரும்பாலான கைபேசிகளில் இருப்பதில்லை.

Redmi 9 மற்றும் Redmi 9A வில் உள்ள கேமரா

கேமராவை பொருத்தவரை இரண்டு கைபேசிகளிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. Redmi 9A வில் பின்பக்கத்தில் f/2.2 aperture உடன்கூடிய 13 megapixel கேமரா உள்ளது. Redmi 9 ல் முதன்மையாக f/2.2 aperture உடன்கூடிய 13megapixel கேமராவுடன் மேலும் இரண்டு கேமராக்கள் உள்ளன. 8MP ultra wide angle sensor, 5MP macro lens மற்றும் ஒரு 2MP depth sensor உள்ளது. Redmi 9’ல் உள்ள செல்பி கேமரா 8 megapixel அதுவே Redmi 9A வில் 5 megapixel கேமரா.

Redmi 9 மற்றும் Redmi 9A வில் உள்ள பேட்டரி

Redmi 9’ல் 18W charging ஆதரவுடன் 5,020mAh பேட்டரி உள்ளது. ஆனால் Redmi 9Aவில் 5,000mAh பேட்டரி உள்ளது. இரண்டு கைபேசிகளிலும் charging செய்வதற்கு Type-C port இருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment