ரிலையன்ஸ் ஜியோ அதன் 47வது ஏ.ஜி.எம்மில், ரிலையன்ஸ் ஜியோபிரைன் என்ற புதிய AI சேவை தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சக்திவாய்ந்த ஜெனரேட்டிவ் AI மாடல்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதாக உறுதியளிக்கிறது என்று தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ கிளவுட்
AI சேவைகள் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்த முடியும். பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய இது இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டளள்து.
அதோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைக்கப்பட்ட நுண்ணறிவு என்ற வகையில் ஏ.ஐ கிளவுட் மூலம் இயக்கப்படும் வசதியையும் அறிமுக்ம் செய்துள்ளது.
இது தரவைச் சேமித்து, நெட்வொர்க் வழியாக அறிவார்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. ஜியோ பயனர்கள் 100 ஜிபி வரை இலவச கிளவுட் சேமிப்பகத்தைப் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“