Advertisment

ரூ.100 விலையில் ரீசார்ஜ் சலுகைகளை நீக்கியது ரிலையன்ஸ் ஜியோ.. காரணம் என்ன?

Reliance Jio discontinues two prepaid plans under Rs 100 Tamil News ரூ.39 ப்ரீபெய்ட் ஜியோபோன் திட்டம் 100MB தினசரி டேட்டா மற்றும் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Reliance Jio discontinues two prepaid plans under Rs 100 Tamil News

Reliance Jio discontinues two prepaid plans under Rs 100 Tamil News

Reliance Jio discontinues two prepaid plans under Rs 100 Tamil News : ரிலையன்ஸ் ஜியோ, ரூ.100-க்கு கீழ் இருந்த இரண்டு ப்ரீபெய்ட் ஜியோபோன் திட்டங்களை நிறுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.39 மற்றும் ரூ.69 ப்ரீபெய்ட் திட்டங்கள், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது மைஜியோ செயலியில் பட்டியலிடப்படவில்லை என்பதால் அவை நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Advertisment

ஜியோவின் வரவிருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதனால் இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 4 ஜி போன் தீபாவளிக்கு முன்பே வெளியிடப்படும்.

ரூ.39 ப்ரீபெய்ட் ஜியோபோன் திட்டம் 100MB தினசரி டேட்டா மற்றும் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 14 நாட்கள் செல்லுபடியாகும் 100 எஸ்எம்எஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.69 ப்ரீபெய்ட் ஜியோபோன் திட்டம், 0.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் மொத்தம் 100 எஸ்எம்எஸ் உடன் அனுப்பப் பயன்படுகிறது. இந்த பேக் 14 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திலும் கிடைக்கிறது. சமீபத்திய மாற்றத்தை முதலில் Telecom Talk கண்டறிந்தது.

கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ, ஜியோபோன் பயனர்களுக்கு முன்பு இருந்த "Buy 1 Get 1 free" சலுகையையும் நீக்கியுள்ளது. இந்த சலுகையின்படி, வாடிக்கையாளர்களுக்கு முதல் ரீசார்ஜ்க்கு பணம் செலுத்திய பிறகு அடுத்த ரீசார்ஜ் இலவசமாகக் கிடைத்தது. தொற்றுநோய்களின் போது ஜியோபோன் பயனர்களுக்கு உதவுவதற்காக ரிலையன்ஸ் ஜியோ இந்த சலுகையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த சலுகை இப்போது தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment