ஜியோவின் அடுத்த அட்டாக்: விரைவில் அறிமுகமாககிறது ஜியோ லேப்டாப்!!!

ஜியோ அவர்களின் சாதனத்தை எடுத்து கொண்டால், அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 4ஜி சிம்  கார்டுடன் கூடிய  ஜியோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெலிகாம் சந்தையில் ஒரு புதிய புரட்சியை செய்த ஜியோ நிறுவனம் தற்போது தனது அடுத்த அட்டாக்கை துவங்கவுள்ளது. அதாவது, ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளதாம்.

இந்த லேப்டாபில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் எனவும் கூறப்படுகிறது.இது குறித்து குவால்காம் தரப்பிலும் விளக்க, அளிக்கப்பட்டுள்ளது. ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகச்வும். ஜியோ அவர்களின்  சாதனத்தை எடுத்து கொண்டால், அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிறகு உலக அளவில் அதிகம் பேர் இணையத்தை உபயோகிக்கும் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ள இவ்வேளையில், ஜியோ அடுத்த முயற்சியாக லேப்டாப்பில் இறங்கியுள்ல ஜியோவின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை ஜியோ லெப்டாப்கள் பெற்றிருக்கும் என்றும் செய்திகள் பரவி வருகின்றன. சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இது குறித்து ரிலைன்ஸ் நிறுவனம் இதுவரை எந்த ஒரு  அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

×Close
×Close