ஜியோ "தன் தனா தன்" புதிய ப்ளான்ஸ்... ரூ.399-க்கு 84 ஜி.பி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபேய்டு மற்றும் போஸ்ட்பேய்டு வாடிக்கையாளர்களுக்கான "தன் தனா தன்" ப்ளானை மேம்படுத்தியதோடு, புதிய ப்ளான்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, அதன் ப்ரீபேய்டு மற்றும் போஸ்ட்பேய்டு வாடிக்கையாளர்களுக்கான “தன் தனா தன்” ப்ளானை மேம்படுத்தியுள்ளது. அதன்படி புதிய 2 ப்ளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ, அதன் ப்ரீபேய்டு மற்றும் போஸ்ட்பேய்டு வாடிக்கையாளர்களுக்கான “தன் தனா தன்” ப்ளானை மேம்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.349, ரூ.399 புதிய ப்ளான்கள் நீண்ட நாள் வேலிடிட்டியை வழங்குவதோடு, அதிக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.349 ப்ளானில் 20 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். தினமும் இவ்வளவு டேட்டா தான் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறைகள் இதில் இல்லை. 20 ஜிபி டேட்டா தீர்ந்து விட்டால், அதற்கு பின்னர் 128 kbps என்ற வேகமாக குறைந்துவிடும்.

Jio Prepaid

இதேபோல, ரூ.399 ப்ளான் ஆனது கிட்டத்தட்ட ரூ.309 ப்ளானை போல தான். இந்த ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, தினமும் 1ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனினும், தினமும், 1 ஜிபி டேட்டாவைத் தான் அதிவேகமாக பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. அனைத்து வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் இலவசம்.

ரூ.309 ப்ளானைப் பொறுத்தவரை, அதில் தினமும் 1 ஜி.பி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். முன்னதாக 28 நாட்கள் வேலிடிட்டி இருந்த நிலையில் தற்போது அது 56 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வீதம் 56 நட்களுக்கு 56 ஜி.பி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரூ.509 ப்ளானில் தினமும் 2 ஜி.பி டேட்டாவை பயன்படுத்திக் கெள்ளலாம். இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.  ரூ.999 ப்ளானில் 90 ஜி.பி டேட்டவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

இதேபோல, ரூ.1999 ப்ளானில் 155 ஜி.பி டேட்டா, 120 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. ரூ.4999 ப்ளானில் 210 நாட்கள் வேலிடிட்டியுடன் 380 ஜி.பி பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.9999 ப்ளானில், 390 நாட்கள் வேலிடிட்டியுடன் 780 ஜி.பி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Jio post paid

இதேபோல போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ புதிதாக இரண்டு ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.349 ப்ளானில், இரண்டு மாத வேலிடிட்டியில் 20 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.399 ப்ளானில் தினமும் 1 ஜி.பி வீதம், மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 90 ஜி.பி டேட்டாவை பெற முடியும்.

ரூ.309, ரூ.509 மற்றும் ரூ.999 ஆகிய ப்ளான்களுக்கு இரண்டு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதனால், தற்போது இந்த ப்ளான்களில் டேட்டா  இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ரூ.309 ப்ளானில் 60 ஜி.பி டேட்டாவும், ரூ.509 ப்ளானில் 120 ஜி.பி டேட்டாவும், ரூ.999 ப்ளானில் 90 ஜி.பி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

×Close
×Close