Advertisment

பாதுகாப்பு குறைபாடு எதிரொலி- ரிலையன்ஸ் ஜியோ கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியல் கசிவு

நோய் அறிகுறி சோதிப்பவரை அணுகியவர்களின் துல்லியமான இருப்பிடத்தையும் கொண்டிருந்தன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
reliance, reliance jio, jio symptom checker, jio data leak, jio coronavirus symptom checker data leak, jio symptom checker data leak, jio, coronavirus symptom, covid19, reliance jio news, reliance jio news in tamil, reliance jio latest news, reliance jio latest news in tamil

reliance, reliance jio, jio symptom checker, jio data leak, jio coronavirus symptom checker data leak, jio symptom checker data leak, jio, coronavirus symptom, covid19, reliance jio news, reliance jio news in tamil, reliance jio latest news, reliance jio latest news in tamil

Reliance Jio: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, வேறு சில தனியார் நிறுவனங்களைப் போல ரிலையன்ஸ் ஜியோவும் தனது சொந்த கோவிட் -19 நோய் அறிகுறியை சுய சோதனை செய்யும் ஆப்பை அறிமுகப்படுத்தியது. எனினும் ஜியோவிடம் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடவுச்சொல் இல்லாமல் அதன் அறிகுறி சரிபார்ப்பவரின் முக்கிய தரவுத்தளங்களில் (core databases) ஒன்றை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளது, என TechCrunch கூறியுள்ளது.

Advertisment

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

கரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது முதல், பயனர்களுக்கு கோவிட் -19 அறிகுறிகள் உள்ளதா என்பதை இனங்காண உதவும் நோக்கத்தோடு, அரசு மற்றும் தனியாரால் உருவாக்கப்பட்ட பல ஆப்களை பார்த்து வருகிறோம். ஜியோவும் அதுபோன்ற ஒரு அம்சத்தை தனது இணையதளத்திலும் MyJio ஆப்பிலும் வெளியிட்டது. TechCrunch, வெளிப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (exposed database) குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் (security researcher) Anurag Sen மூலம் அறிந்துக் கொண்டது. அவர் இதை மே 1, 2020 அன்று கண்டுபிடித்தார். ஏப்ரல் 17 முதல் மில்லியன் கணக்கான பதிவுகள் மற்றும் ஆவணங்கள் (logs and records) அதிலிருந்தன.

இந்த தரவு, யார் சோதனை எடுத்தார் சுயமாகவா அல்லது உறவினர் போன்றவைகளா, அவர்களுடைய பாலினம், அவரது வயது மற்றும் பயனருடைய browser version மற்றும் அவருடைய operating system குறித்த ஒரு சிறு துணுக்கு தகவல் ஆகிய ஆவணங்களையும் உள்ளடக்கியது

சுயவிவரத்தை உருவாக்கியது பயனர்களுக்கு அவர்களின் அறிகுறிகளை காலப்போக்கில் புதுப்பிக்க உதவியது. மேலும் எந்தவிதமான நோய் அறிகுறிகளை அவர்கள் அனுபவிக்கின்றனர், யாரிடமெல்லாம் அவர்கள் தொடர்பில் இருந்தனர் மற்றும் என்னவிதமான ஆரோக்கிய நிலமைகள் இருக்கலாம் போன்ற கேள்விகளை நோய் அறிகுறி சோதிப்பவர் கேட்டிருந்த கேள்விகளில் உள்ளடங்கும்.

அந்த அறிக்கையின் படி, நோய் அறிகுறி சோதிப்பவரை அணுகியவர்களின் துல்லியமான இருப்பிடத்தையும் கொண்டிருந்தன (browser or phone’s location data).

இந்த சிக்கலைப் பற்றி ரிலையன்ஸ் ஜியோவிடம் அறிவிக்கப்பட்டது அதன்பிறகு அது system த்தை ஆப்லைனிற்கு மாற்றியது. நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம் என ஜியோவின் செய்தி தொடர்பாளர் Tushar Pania, TechCrunch யிடம் தெரிவித்தார். எனினும் நோய் அறிகுரி சோதனை ஆப் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தியவர்களிடம் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து தகவல் தெரிவிக்கப்படுமா என்பதை Pania தெளிவுப்படுத்தவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Reliance Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment