3 ரியர் கேமராக்களுடன் அசத்தலாக வெளிவரும் சாம்சங் கேலக்ஸி A7

செல்ஃபி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அன் நேச்சரலாக இருக்கிறது.

ஸ்ருதி தபோலா

சாம்சங் கேலக்ஸி A7 சிறப்பம்சங்கள்

  • 6 இன்ச் SAMOLED திரையுடன் வலம் வரும் இந்த போனை இயக்குகிறது ஆண்ட்ராய்ட் 81. ஓரியோ இயங்கு தளம்.
  • இதனை இயக்கும் சிப்செட் Exynos 7885
  • மூன்று ரியர் கேமராக்களுடன் ( 24MP+8MP+5MP ) மிரட்டலாக வரும் இந்த கேமராவின் செல்பி கேமராவின் திறன் 24 எம்.பி. ஆகும்
  • 4ஜிபி/6ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ்ஜூடன் வருகிறது இந்த போன்.
  • கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு என்பது இந்த போனின் கூடுதல் அம்சமாகும்.

Samsung Galaxy A7 : விலை மற்றும் கேமரா

ஹையர் எண்ட், லோயர் எண்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் என அனைத்து தரப்பில் இருந்தும் வலுவான போட்டிகள் இந்த மார்க்கெட்டில் சாம்சங்கிற்கு இருக்கும் பட்சத்தில் மூன்று ரியர் கேமராவின் சிறப்பம்சத்தினை மட்டும் நம்பி வெளியாகியுள்ளது இந்த மிட்ரேஞ்ச் கேமரா போன். ஏற்கனவே ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரியஸ்ஸில் இந்த மூன்று ரியர் கேமரா சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சாம்சங் கேமரா போனின் விலை 23,990 ஆகும்.

மேலும் படிக்க : ஆப்பிளிற்கும் சாம்சங்கிற்கும் கடும் சவலாய் விளங்கும் ஹூவாய் மேட் 20 ப்ரோ 

சாம்சங் கேலக்ஸி A7 சிறப்புப் பார்வை, Samsung Galaxy A7 Camera Review.

சாம்சங் கேலக்ஸி A7 சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

இந்த மூன்று கேமராக்களில் 8 எம்.பி திறன் கொண்ட கேமரா அல்ட்ரா – வைட் ஆங்கில் கேமராவாகும். உங்களால் 120 டிகிரி பாய்ண்ட் ஆஃப் வியூவில் போட்டக்களை எடுத்துக் கொள்ள இயலும்.  நிறைய மிட் – ரேஞ் கேமராக்களில் இது போன்ற ஒரு சிறப்பம்சம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமரா அப்ளிகேஷனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யூசர் இண்டெர்ஃபேஸ் மிகவும் எளிமையாக இருப்பதால் எந்த மோடில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதை நம்மால் உடனே அறிந்து கொள்ள இயலும்.

சாம்சங் கேலக்ஸி A7 சிறப்புப் பார்வை, Samsung Galaxy A7 Camera Review,

மிகக் குறைவான ஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

லோ – லைட் போட்டோகிராபிக்கு உகந்ததல்ல இந்த போன். காரணம் குறைவான ஒளியில் எடுக்கப்படும் புகைப்படங்களில் துல்லியத் தன்மை வெகுவாக குறைந்துள்ளது.

செல்ஃபி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஸ்கின் ஸ்மூத்னிங் அவ்வளவு துல்லியமாக இல்லை. செல்ஃபி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அன் நேச்சரலாக இருக்கிறது.

Samsung Galaxy A7 : பேட்டரி மற்றும் இதர சிறப்பம்சங்கள்

ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருட்டிலும் மிகவும் துல்லியமாக வேலை செய்கிறது.  போனில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, புதிதாக வாட்ஸாப் மெசேஜ் வந்திருந்தால் அதற்கு விரைவாக பதில் கூறிட இயலும். எந்த ஒரு தொந்தரவுமின்றி உங்களின் படத்தினை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

பேட்டரி 3,300mAh திறன் கொண்டது. ஆனால் சார்ஜ் செய்வதற்கு மீண்டும் மைக்ரோ யூ.எஸ்.பி சார்ஜரையே பயன்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close