Samsung Galaxy F41 Series Tamil News: புதிய சாம்சங் கேலக்ஸி F41-ன் ஃபுல் ஆன் டிஸ்ப்ளேதான் இந்த புதிய மொபைலின் முக்கிய சிறப்பு. இது பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பப்பட்ட அம்சம். மேலும், நிறுவனத்தின் M சீரிஸ் மற்றும் சாம்சங்கின் உயர்நிலை சாதனங்களில் காணப்படும் பெரிய மற்றும் கவர்ச்சிகரமான காட்சிகளையும் பெற்றிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் கைபேசிகளில் எல்லா வகையான உள்ளடக்கங்களையும் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். அவர்களுக்கு பெசல்கள் இல்லாத பெரிய மற்றும் தெளிவான காட்சிகள் அவசியம் இருக்க வேண்டும். அண்மையில் முடிவடைந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் ஷாப்பிங் திருவிழாவின் போது ஒரு பெரிய கூட்டத்தை இழுத்துச் சென்றது இந்த கேலக்ஸி F41. கேலக்ஸி F41, 6.4 இன்ச் sAMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, 64 MP கேமரா மற்றும் 6000 mAh பேட்டரியுடன் வருகிறது. 6 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை ரூ.16,999, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை ரூ.17,999.
சோதனைக் காலத்தில், கேலக்ஸி F41 மென்மையான, வேகமான கைபேசியாக இருந்தது. இது அடிப்படையில் Gen Z மற்றும் இளம் மில்லினியல்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது மிகவும் ஆராய்ந்து வாங்கும் மக்கள் கூட்டம். இது சாம்சங் F சீரிஸின் முதல் ஸ்மார்ட்போன். மேலும், இது ஃப்ளிப்கார்ட்டுடன் நெருங்கிய பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கப்பட்டது. பளபளப்பான பிரீமியம் கிரேடேஷன் பேக் பேனலுடன் கேலக்ஸி F41 வருகிறது. ஃப்யூஷன் பிளாக், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் கிரீன் ஆகிய மூன்று அற்புதமான வண்ணங்களில் கிடைக்கும். வெறும் 8.9 மிமீ மெல்லிய உடலைக்கொண்டிருப்பதால் இந்த மொபைலைப் பிடித்து உபயோகிப்பது மிகவும் சுலபம். கேமிங், வீடியோ, மல்ட்டி-டாஸ்கிங் அல்லது பிரவுசிங் உள்ளிட்டவைக்கு ஏற்ற இந்த தொலைபேசியில் 6.4 இன்ச் முழு எச்டி + sAMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே உள்ளது. பின்புறத்தில் ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் வேகமான ஃபேச அன்லாக் ஆகியவை உள்ளன. சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இன்-பாக்ஸ் 15W வகை சி ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது.
ஹூட்டின் கீழ், தடையற்ற செயல்திறனை உறுதி செய்யும் எக்ஸினோஸ் 9611 ஆக்டா கோர் செயலியைப் பார்க்கலாம். 64 ஜிபி / 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரியும் இதில் உள்ளது. சாம்சங்கின் புதிய One UI கோருடன் அண்ட்ராய்டு 10-ல் இந்தத் தொலைபேசி இயங்குகிறது.
கேலக்ஸி F41, 64 MP கேமராவுடன் வருகிறது. இது மிகவும் அற்புதமான படங்களைப் பிடிக்க ஏதுவாக இருக்கும் மற்றும் ‘சிங்கிள் டேக்’ அம்சத்துடன் வருகிறது. அதாவது ஒரே கிளிக்கில் 10 வெவ்வேறு படங்களை-ஏழு புகைப்படங்கள் மற்றும் மூன்று வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது. இதிலுள்ள சூப்பர் ஸ்டெடி பயன்முறை நீங்கள் செயலில் இருக்கும்போது கூட மென்மையான வீடியோக்களை வழங்குகிறது. 4K-ல் பதிவுசெய்து ஹைப்பர்லேப்ஸ் மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்களை எடுக்கலாம். மேலும், சக்திவாய்ந்த 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸையும், 123 டிகிரி பார்வைக் களத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. நேரடி ஃபோகஸுடன் அற்புதமான உருவப்படக் காட்சிகளை எடுப்பதற்கு 5MP டெப்த் லென்ஸ் உள்ளது.
இந்த முதல் கேலக்ஸி F சீரிஸில் ஆச்சரியப்படுத்தும் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. இது மிகவும் ஸ்மார்ட், ஸ்டைலிஷ் மற்றும் அதிவேகமானது. சிறந்த கேமராவுடன் அழகிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தற்போதைய தலைமுறையினர் விரும்பும் மூன்று கேமரா அமைப்பும் இதில் இருக்கிறது. குறைந்த விலையில் சிறந்த பயனர் அனுபவத்தை இந்த கேலக்ஸி F41 வழங்குகிறது.
டிஸ்பிளே : 6.4 இன்ச் முழு HD + sAMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே
ப்ராசசர் : எக்ஸினோஸ் 9611 ஆக்டா கோர் செயலி
இயக்க முறைமை : அண்ட்ராய்டு 10
மெமரி மற்றும் சேமிப்பு : 6 ஜிபி RAM, 64/128 ஜிபி இன்டர்னல் மெமரி, 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
கேமரா : 64MP + 8MP + 5MP முதன்மை கேமரா, 32MP முன் கேமரா
பேட்டரி : 6000 mAh, 15W C வகை ஃபாஸ்ட் சார்ஜர்
மதிப்பிடப்பட்ட விலை : ரூ.16,999 (6 ஜிபி + 64 ஜிபி), ரூ.17,999 (6 ஜிபி + 128 ஜிபி)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"