Advertisment

சாம்சங் கேலக்ஸி ஜே6 வில் இடம்பிடித்து இருக்கும் முக்கிய அம்சம்!

3எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாம்சங் கேலக்ஸி ஜே6 வில் இடம்பிடித்து இருக்கும் முக்கிய அம்சம்!

மொபைல் பிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ஃபோனில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான அம்சங்கள் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

Advertisment

மும்மையில் கடந்த 21 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சாமசங் நிறுவனத்தின் முக்கியமான சில மாட ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று தான் சாம்சங் கேலக்ஸி ஜே6. இந்த ஃபோன் வெளியாவதற்கு முன்பே இதுக்குறித்த பல தகவல்கள் இணையத்தில் கசிந்தன.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ஃபோனின் விலை ரூ. 13, 990 ஆக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பட்ஜெட் விலை ஃபோன் என்பதால் பலரும் அதிகம் ஆர்வம் காட்டினர். கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஃபோன்கள் சாம்சங் ஸ்டோர் மற்றும் பளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டடிருந்தது.

சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது

கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர சிம் கார்டில் வொஇஒல்ட் வசதியும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment