Advertisment

டுயல் ரியர் கேமரா வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) அறிமுகம்!

டுயல் கேமரா வசதியுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung, Smartphones, Samsung Galaxy J7+,dual-rear cameras

சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுயல் கேமரா வசதியுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்விட்டது என்றபோதிலும், செம்பம்பர் 18-ம் தேதி முதலே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விலை தாய்லாந்து மதிப்பில் TBH 12,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சராசரியாக ரூ.24,829 என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் சிம் பொருத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி ஜே7(Galaxy J7) ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) ஸ்மார்ட்பபோனில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மெட்டல் யுனிபாடி டிசைன், 5.5 இன்ச் (5.5-inch Full HD AMOLED display) டிஸ்ப்ளே.

  • மீடியாடெக் ஹெலியோ பி20 ஆக்டா-கோர் ப்ராசஸர் (MediaTek Helio P20 octa-core processor)
  • 4 ஜி.பி ரேம், 32 ஜி.பி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்(256 வரை ஜி.பி வரை)
  • 13 எம்.பி மற்றும் 5 எம்.பி டுயல் கேமரா மற்றும் 16 எம்.பி செல்ஃபி கேமரா
  • 3000mAh திறன் கொண்ட பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 7,1 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக் கூடியது. மேலும்,, ஃபிண்கர் ப்ரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

இதுபோன்ற சிறப்பம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே7+ (Samsung Galaxy J7+) ப்ளாக், கோல்டு, பிங்க் ஆகிய மூன்று நிறங்களில் வெளிவரவுள்ளது.

எனினும், தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ள சாம்சங் நிறுவனம், மற்ற நாடுகளில் எப்போது இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவரும் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment