Advertisment

ரூ.10 ஆயிரம்தான்.. சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. டிச.9 அறிமுகம்!

இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy M04 India launch

சாம்சங்கின் புதிய வரவு ஸ்மார்ட்போனான Samsung Galaxy M04

சாம்சங் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன்கள் டிச.9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிமுகமாகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரத்துக்குள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்கள் 128GB வரையிலான ஆன்-போர்டு சேமிப்பகத்துடன் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் இரண்டு வருட OS மேம்படுத்தல்களை உறுதியளிக்கிறது.

Advertisment

தொடர்ந்து, சாம்சங்கின் ரேம் பிளஸ் விர்ச்சுவல் மெமரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Galaxy M04 8ஜிபி வரை ரேம் கொண்டு வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது

முன்பக்கத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச். ஃபோனைப் பார்க்கும்போது கைரேகை ரீடர் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.

இது வெளியீட்டுக்கு பின்னர் உறுதியாக தெரியவரும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் உள்ளன, இருப்பினும் அவற்றின் தெளிவுத்திறன் மற்றும் லென்ஸ் வகை தற்போதுவரை வெளியாகவில்லை.

Galaxy M-series போன்கள் பெரிய பேட்டரிகளுக்கு பெயர் பெற்றவை. ஆகையால், M04 இல் 5,000mAh பேட்டரி இருக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment