Advertisment

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் : சிறப்பம்சங்கள், விலை, விற்பனை, பெர்ஃபார்மென்ஸ் குறித்த முழு அலசல்

Samsung Galaxy Note 10 Plus : உங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy Note 10, 10+ smartphone Prices in India

Samsung Galaxy Note 10, 10+ smartphone Prices in India

Samsung Galaxy Note 10 Plus first review  :  என்னதான் ஆப்பிள் போன்கள் வந்து சென்றாலும் சாம்சங்கின் கேலக்ஸி மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறடது. ஒரு க்ளோபல் லீடரிடம் போட்டியிட்டு தனக்கான சந்தையை உருவாக்குவதிலும், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் புதிய புதிய போன்களை ஒரே சீரியஸில் வெளியிடுவதும் சாம்சங் பயன்படுத்திய உத்தி இந்த 9 வருடங்களில் மாபெரும் மலைப்பினை உருவாக்குகிறது.

Advertisment

Samsung Galaxy Note 10 Plus first review

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் சீரியஸில் போன்கள் தற்போது வெளியாகியுள்ளன. 7ம் தேதி (நேற்று) வெளியான இந்த ஸ்மார்ட்போன்கள் எப்படி இருக்கிறது என்பதை நாம் இங்கே காணலாம்.

Samsung Galaxy Note 10 Plus  வடிவமைப்பு

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன், இதற்கு முந்தைய வெர்ஷன் போன்று இல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இதன் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் க்ளாஸ் பேக் அமைப்பு இந்த போனை மேலும் எலெகெண்ட்டாக உணர வைக்கிறது.  பின்பக்கத்தில் க்வாட் கேமராவும், திரையின் உள்ளே குவால்கோம் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. இது அப்படியே சாம்சங் கேலக்ஸி எஸ்10+ போனின் ரீடிஃபைண்ட் வெர்ஷன் என்றால் சரியாக இருக்கும். ஆனால் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரின் செயல்பாடு ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ அளவிற்கு இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம்.

ஃபேமலி வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து தப்பிக்க ஒரு எளிய  வழி... 

இந்த போன் கைக்கு அடக்கமாக இருந்தாலும், ஸ்லிப்பாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கேஸ் மாட்டிக் கொள்வது உங்களின் இதயத்திற்கு நல்லது. நிறைய வண்ணங்களில் இந்த போன் வெளி வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். க்ளோ, வெள்ளை, மற்றும் கறுப்பு நிறங்கள் பார்க்க அசத்தலாக இருக்கிறது. உங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப். அதனால் அதிக வருத்தம் தேவையில்லை.

Samsung Galaxy Note 10, Samsung Galaxy Note 10 Plus

 

இதர சிறப்பம்சங்கள்

திரை :  சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் கொண்ட Quad HD+ Super AMOLED திரையை கொண்டுள்ளது.  ரெசலியூசன் : 3040×1440 பிக்சல்கள் ஆகும்.  HDR10+ வீடியோக்களை நீங்கள் இதில் கண்டு களிக்கலாம்.

S Pen

விரைவாக நோட்ஸ் எடுப்பதற்காக S Pen இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களால் எளிதில் படம் வரைய, எழுதவும் இயலும். கையெழுத்தில் இருந்து டெக்ஸ்ட் கன்வெர்சனுக்கு ஏற்ற வகையில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் பென்னை பயன்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்படி பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமானது ஏர் ஆக்‌ஷன்ஸ். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு ரிமோட்டாகவே இந்த பென் செயல்படுகிறது. போட்டோ எடுப்பதற்கும் கூட இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

publive-image

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகிறது. 256ஜிபி, மற்றும் 512 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் ஆனால் ரேம் கெப்பாசிட்டியில் எந்த மாற்றமும் இல்லை. 12ஜிபி ரேம் மற்றும் 7 நானோ மீட்டர் கொண்ட எக்ஸினோஸ் 9825 ப்ரோசசர் அல்லது குவால்கோம் ஸ்நாப்ட்ராகனின் 855 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தி நீங்கள் 1 டிபி வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம்.  4300mAh சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஓருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் வரை நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை பிரச்சனை ஏதுமின்றி பயன்படுத்திக் கொள்ள இயலும்.

Samsung Galaxy Note 10, Samsung Galaxy Note 10 Plus

Samsung Galaxy Note 10 Plus விலை மற்றும் விற்பனை

இந்த போனை நீங்கள் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஃப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம்மற்றும் டாட்டா க்ளிக் ஆகிய ஆன்லைன் ஸ்டோர்களில் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம். 23ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விலைக்கு வருகிறது.  கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79,999ல் இருந்து துவங்குகிறது. கேலக்ஸி நோட் 10 - இன் விலை ரூ. 69,999ல் இருந்து துவங்குகிறது.

அளவு :  77.2 x 162.3 x 7.9 எம்.எம்.

எடை : 196 கிராம்கள் ஆகும் . 5G எம்.எம். மாடலின் எடை 198 கிராம்கள்.

ஓ.எஸ் : ஆண்ட்ராய்ட் பை 9.0 இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment