Advertisment

சாம்சங் கேலக்ஸி S10+ போன் பற்றிய புதிய அப்டேட் இது தான்...

ஹையர் எண்ட் போனின் விலை சுமார் 1800 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy S10 Plus

Samsung Galaxy S10 Plus

Samsung Galaxy S10 Plus :  சாம்சங் கேலக்ஸி S10+ போன் இந்த வருடம் வெளியாக உள்ளது. எஸ் சீரியஸ் போன்கள் வெளியாக தொடங்கி இந்த வருடத்துடன் 10 வருடங்கள் நிறைவடைகின்றன.

Advertisment

அதனை கொண்டாடும் விதமாகவும்,பிப்ரவரி 20ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் மிகவும் கோலகலமாக இந்த போனின் அறிமுக நடைபெற உள்ளது. அப்போது S10 lite, S10, S10+ என மூன்று வேரியண்ட்களில் இந்த போனை வெளியிட திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

மேலும் படிக்க : 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி S10...

Samsung Galaxy S10 Plus சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ( Samsung Galaxy S10 Plus ) போனின் சிறப்பம்சங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.   ஐஸ் யுனிவர்ஸ் என்ற ட்விட்டர் லீக்கர் பக்கம், இந்த போனின் புதிய சிறப்பம்சங்களை லீக் செய்துள்ளது.

அதில் செராமிக் வெர்ஷனாக வெளிவரும் இந்த போனின் ரேம் 12ஜிபி ஆக இருக்கும் என்றும் 1TB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகும் என்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

க்ளாஸ் வேரியண்ட் போன்களை விட அதிக அளவு உறுதியாக உழைக்கும் தன்மை கொண்ட செராமிக்கால் இந்த போன் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேசிக் எண்ட் போனின் விலை 710 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்றும் ஹையர் எண்ட் போனின் விலை சுமார் 1800 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.இ.எஸ் மாநாட்டில் தங்களுடைய 5ஜி தொழில்நுட்பத்தில் வெளியாகும் போனின் ப்ரிவியூவை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்.

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment