Advertisment

2019ற்கான சாம்சங்கின் முதல் ப்ரீமியம் போன்... சாம்சங் கேலக்ஸி 10+ முதற்பார்வை

இந்தியாவில் Samsung Galaxy S10+ போனின் ஆரம்ப கட்ட விலை ரூ.73,900 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy S10+

Samsung Galaxy S10+

Samsung Galaxy S10+ review : கடந்த மாதம் மிக பிரம்மாண்டமாய் வெளியானது சாம்சங் நிறுவனத்தின் புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள். கேலக்ஸி எக்ஸ் சீரியஸ் போன்கள் சந்தைக்கு வந்து 10 வருடங்கள் ஆன நிலையில் அதன் கொண்டாட்டத்தை அன்பேக்ட் என்ற நிகழ்ச்சி மூலம் சான்பிராஸ்கோவில் புதிய போன்களை அறிமுகப்படுத்தி கொண்டாடியது சாம்சங் நிறுவனம்.

Advertisment

உலகின் முதல் மடக்கு போனை வெளியிட்டு தொழில்நுட்பத்தில் புத்தம் புதிய சாதனையையே உருவாக்கியது சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்.

அனைவரும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் சிறப்பம்சங்கள் என்ன, போனின் விலை என்ன என்ற ஆராய்ச்சியில் அனைவரும் ஈடுபட்டு வந்த நிலயில் சாம்சங் கேலக்ஸி எஸ்10+ மற்றும் அதன் வேரியண்ட்டுகளை அடியோடு மறந்தேவிட்டோம்.

மேலும் படிக்க : சாம்ங்க் கேலக்ஸி ஃபோல்ட் Vs ஹூவாய் மேட் எக்ஸ் - எது சிறந்த மடக்கு போன் ?

Samsung Galaxy S10+ சிறப்பம்சங்கள் :

6.4 இன்ச் அளவுள்ள் குவாட் எச்.டி மற்றும் கர்வ்ட் டைனமிக் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டது

சாம்சங் எக்ஸினோ 9820 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

12MP+12MP+16MP செயல் திறன் கொண்ட பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் ( 8GB RAM/512GB, 12GB RAM/1TB storage  வேரியண்ட்டுகளும் அடங்கும்)

4100mAh பேட்டரித் திறன்

ஃபாஸ்ட் வையர்லெஸ் சார்ஜிங் 2.0 டெக்னாலஜி போன்றவை இதில் சிறப்பு கவனம் பெற்ற அம்சங்களாக உள்ளன.

இந்தியாவில் Samsung Galaxy S10+ போனின் ஆரம்ப கட்ட விலை ரூ.73,900 ஆகும்.

உள்கட்டமைப்பு மற்றும் இதர சிறப்பம்சங்கள்

மிகவும் ப்ரைட்டான போன்களின் திரைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. ப்ரைட்னஸ் திறன் 1200 நிட்ஸ் ஆகும். மிகவும் வெளிச்சமான, சூரிய ஒளி அதிமாக இருக்கும் இடத்திலும் இந்த போனை எவ்வித பிரச்சனையும் இன்றி பயன்படுத்த இயலும்.

செல்ஃபி கேமரா திரையுன் உள் பொருத்தப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.  குவால்கோம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அல்ட்ரா சோனிக் ஃபிங்கர் பிரிண்ட் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy S10+ கேமராக்கள்

மூன்று பின்பக்க கேமரா லென்ஸ்கள் வழங்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும், அதி சிறப்பாகவும் அமைந்துள்ளது. இதன் வெளியீட்டிற்காகவே இந்த போனை வாங்குபவர்களும் கூட உண்டு.

Dual OIS 12MP, f2.4, OIS: Telephoto

12MP, F1.5/2.4, OIS: Wide-angle

16MP, F2.2: Ultra-wide with 2x optical zoom, 10x digital zoom - இந்த மூன்று லென்ஸ்களும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படக் கலையை ஒரு படி உயர்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

publive-image publive-image

 

publive-image

குறைகள்

தற்போது வெளியாகியுள்ள இந்த போனில் பல்வேறு குறைகளை வாடிக்கையாளர்கள் முன் வைத்து வருகின்றனர். சாம்சங் நிறுவனம் தங்களால் இயன்ற அளவில் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறது.

கையில் இருந்து சீக்கிரம் நழுவும் வகையில் இருப்பது ஒரு வகையில் மிகப் பெரிய குறையாகவேபடுகிறது. கையில் இருந்து நழுவி விழுந்தால் வாடிக்கையாளர்கள் மனம் புண்படும் அளவிற்கு இதன் வெளிப்புற வடிவமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

செல்ஃபி கேமராவை மேலும் நன்றாக செயல்படும் படி வடிவமைத்து இணைத்திருக்கலாம். போதுமான வெளிச்சம் இல்லாவிட்டால் போட்டோவில் க்ரெய்ன் விழுந்துவிடுகிறது.

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment