Advertisment

சாம்சங் புதிய மாடல் உங்களுக்குப் பிடிக்குமா? இதுல பாட்டரி-தான் ஸ்பெஷல்!

Samsung galaxy m41: சாம்சங் தனது Galaxy M-series ல் பெரிய பேட்டரியுடன் கூடிய புதிய கைபேசிகளை குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samsung, samsung galaxy m41, galaxy m51, samsung galaxy phone 6800mah battery, சாம்சங், Galaxy M-series, galaxy phone 7000mah battery, galaxy m series phone

samsung tamil news, samsung galaxy m41 m51 features, samsung galaxy mobile phone m41 battery features, சாம்சங், சாம்சங் மொபைல் போன்

Samsung Tamil News: ஆற்றல் வாய்ந்த 6800mAh பேட்டரியுடன் கூடிய புதிய Galaxy ஸ்மார்ட் கைபேசியை கொண்டுவர சாம்சங் (Samsung) வேலை செய்துவருகிறது. இந்த கைபேசி Galaxy M41 அல்லது M51 என்று அழைக்கப்படலாம். 6800mAh பேட்டரி என்பது மதிப்பிடப்பட்ட திறன், எனவே வழக்கமான திறன் 7000mAh ஆக இருக்க வேண்டும். இந்த வகையான பேட்டரியை ஒருவர் tablet ல் இந்த நாட்களில் காணலாம்.

Advertisment

இதுவரை சாம்சங் Galaxy M-series ல் வரக்கூடிய மிகப்பெரிய பேட்டரி 6000mAh. அப்படி சாம்சங் 6,800mAh பேட்டரியுடன் ஒரு புதிய கைபேசியை அறிமுகப்படுத்தினால் அதுதான் மிகப்பெரிய பேட்டரியுடன் கூடிய முதல் Galaxy ஸ்மார்ட் கைபேசி.

வரவிருக்கும் புதிய கைபேசி குறித்து கொஞ்சம் விவரங்கள் தான் தெரியவந்துள்ளது, எனினும் அது Galaxy M-series ன் கீழ் தான் வரவிருக்கிறது. Galaxy M41 மாடல் கைபேசி ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு பதிலாக இந்த புதிய சாதனம் Galaxy M51 என்று அழைக்கப்படலாம். ஆனால் உறுதியான விஷயம் என்னவென்றால் சாம்சங் தனது Galaxy M-series ல் பெரிய பேட்டரியுடன் கூடிய புதிய கைபேசிகளை குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கும்.

இவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்... நோக்கியாவை அடிச்சுக்க முடியாது!

சாம்சங்கின் Galaxy M-series ஸ்மார்ட் கைபேசிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் நல்லவை ஆனால் அவை ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் வருவதாக தெரிகிறது. Galaxy M31 அல்லது Galaxy M21 ஆகியவை எல்லா வகையிலும் சிறந்த கைபேசிகள். சந்தையில் உள்ள அனைத்து நடுத்தர ரக கைபேசிகளிலும் இந்த வகை கைபேசிகளில் சிறந்த டிஸ்ப்ளே உள்ளது. மேலும் நடுத்தர ரக கைபேசிகளின் மத்தியில், Galaxy M-series கைபேசிகளில் பெரிய பேட்டரியும் உள்ளது.

Galaxy M-series ஐ போட்டிக்கு அப்பால் கொண்டு சேர்ப்பது அதில் உள்ள சில அம்சங்கள். ஆனால் துர்திஷ்டவசமாக அவை இப்போது உற்சாகமளிப்பதாக இல்லை. ஒரு Galaxy M-series கைபேசியியை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது. இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அடுத்த Galaxy M-series சாதனங்களில் மாற்றங்களை கொண்டு வரும் என நம்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment