Advertisment

கிரகண நேரம் எது? வெற்றுக் கண்களால் பார்க்கலாமா?

Suriya Granam 2019: வெற்றுக் கண்களாலோ, உங்களின் ஆர்டினரி சன் க்ளாஸ்களாலோ இதனை நீங்கள் காண்பதை தவிர்க்க வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Solar Eclipse 2019 Date, Timings, solar eclipse, solar eclipse 2019

solar eclipse, solar eclipse 2019

Suriya Kiraganam 2019 Tamil: கடந்த பத்தாண்டுகளைக் கணக்கிட்டால், இதன் கடைசி சூரிய கிரகணம் இன்று தென்னிந்தியாவில் நிகழ்கிறது. கிரகணத்தின் போது, சூரியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ‘நெருப்பு வளையமாக’ தோன்றும்  என்பது இதிலுள்ள மற்றொரு அதிசயம். இந்த சூரிய கிரகணம்  சரியாக இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது. காலை 11:16 மணியளவில் கிரகணம் நிறைவடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் சரியாக 9.30 மணியளவில்  சூரியன் 'நெருப்பு வளையமாக' காட்சி தரும்.

Advertisment

வானில் நிகழும் இந்த அதிசய நிகழ்வுகளை தென்னிந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து காணலாம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன ?

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது சராசரி இடைவெளியை காட்டிலும் மிக அதிகம் என்பதால் நம்மால் முழுமையான சூரிய மறைப்பை காண இயலாது. மாறாக நிலவின் பரப்பு சூரியனை மறைத்ததிற்கு பிறகு முழுமையான வட்டவடிவ வில்லாக (Ring of Fire) சூரியன் தகிப்பதை காண இயலும்.

சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்

இந்தியாவில் இந்நிகழ்வை எங்கே காண இயலும்?

மங்களூரு - கர்நாடகா - இந்தியா

காஸர்காட் - கேரளா - இந்தியா

தலச்சேரி - கேரளா - இந்தியா

கோழிக்கோடு - கேரளா - இந்தியா

பாலக்காடு - கேரளா - இந்தியா

கோவை - தமிழ்நாடு - இந்தியா

ஈரோடு - தமிழ்நாடு - இந்தியா

கரூர் - தமிழ்நாடு - இந்தியா

திண்டுக்கல் - தமிழ்நாடு - இந்தியா

சிவகங்கை - தமிழ்நாடு - இந்தியா

திருச்சி - தமிழ்நாடு - இந்தியா

புதுக்கோட்டை - தமிழ்நாடு - இந்தியா

Solar Eclipse Today Live Updates: தமிழகத்தில் வளைய வடிய சூரிய கிரகணம் – அரிய நிகழ்வைப் பார்க்க மக்கள் ஆர்வம்

கிரகணம் நடைபெறும் நேரம்

மும்பை, பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், போபால், ஜெய்ப்பூர், சண்டிகர் போன்ற நகரங்களிலும் நீங்கள் இந்த நிகழ்வை காண இயலும்.  காலை 8 மணி 17 நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் ஆரம்பமாகிறது. சரியாக 09:30 மணிக்கு உச்ச நிலையை அடைகிறது இந்த கிரகணம். முடிவடைய 10:57 மணி ஆகும். ஆக 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் நடைபெறுகிறது. வெற்றுக் கண்களாலோ, உங்களின் ஆர்டினரி சன் க்ளாஸ்களாலோ இதனை நீங்கள் காண்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க : உடனே உங்கள் வாட்ஸ்ஆப்பை ரீ-இன்ஸ்டால் செய்யுங்கள்… இல்லையென்றால்?

Solar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment