Advertisment

2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தின் சிறப்புகள்

Solar Eclipse 2020 இது கடைசியாக 1935-ம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை 2206-ல் நிகழலாம்.

author-image
WebDesk
New Update
Solar Eclipse 2020 last eclipse date and time in India Tamil news

Solar Eclipse 2020 date and time in India

Solar Eclipse 2020 Date and Time in India Tamil News : இந்த ஆண்டின் கடைசி கிரகணம், டிசம்பர் 14 அன்று ஏற்படும். புதிய சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சென்று சூரியனை முற்றிலுமாகத் தடுக்கும்போது, வான நிகழ்வு ஏற்படும். முந்தைய சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இதுவரை, 2020-ம் ஆண்டில் நான்கு பெனும்பிரல் சந்திர கிரகணங்களையும் பார்த்திருக்கிறோம்.

Advertisment

timeanddate.com-ன் படி, பகுதி கிரகணம் டிசம்பர் 14 அன்று 19:04 ஐ.எஸ்.டி அதாவது இரவு 7.04 மணிக்குத் தொடங்கும். அதே நேரத்தில் முழு கிரகணம் 20:02 ஐ.எஸ்.டி அதாவது 8.02 மணிக்குத் தொடங்கும். சூரிய கிரகணம் 21:43 (9.43) மணிக்கு உச்சம் அடைந்து டிசம்பர் 15 அன்று 12.23 மணிக்கு முடிவடையும்.

மற்ற ஆண்டு சூரிய கிரகணம் போல், மொத்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் அமைந்துள்ள டெமுகோ, வில்லாரிகா, சியரா கொலராடா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இந்த வான நிகழ்வு தெரியும். மறுபுறம், பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் தெற்கே ஒரு பகுதியில் சூரிய கிரகணத்தைக் காண முடியும்.

ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து சூரிய கிரகணங்கள் நிகழலாம். இருப்பினும், பெரும்பாலான ஆண்டுகளில் இரண்டு சூரிய கிரகணங்களை மட்டுமே நாம் காண்கிறோம். தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - நாசா படி, ஐந்து சூரிய கிரகணங்களின் எண்ணிக்கை மிகவும் அரிதானது. இது கடைசியாக 1935-ம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை 2206-ல் நிகழலாம். மேலும், கடந்த 5,000 ஆண்டுகளில், ஒரு வருடத்தில் ஐந்து சூரிய கிரகணங்களை 25 முறை மட்டுமே பார்த்திருக்கிறோம்.

கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 30 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பெனும்பிரல் சந்திர கிரகணம் அடிவானத்திற்குக் கீழே நடந்ததால் தெரியவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Solar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment