Advertisment

அரசியல்வாதிகளை நாசாவுக்கு தலைமையேற்க சொன்னா இப்டித்தான்... ப்ளூட்டோவுக்கே உடம்பு சரியில்லாம போய்ருக்கும்!

ட்ரெம்பினால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இன்னும் எதிர்பார்த்தால் நம் விஞ்ஞான அறிவுக்கு பங்கம் தான் அது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Solar system's 9th planet Pluto says Nasa chief administrator Bridenstine

Solar system's 9th planet Pluto says Nasa chief administrator Bridenstine

Solar system's 9th planet Pluto says Nasa chief administrator Bridenstine : நம்முடைய சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கொள்கள் இருக்கின்றன என்ற கேள்விக்கு எப்போதுமே பதில்கள் சரியாக முறையாக இருப்பதில்லை. இன்றும் 9 கோள்கள் சூரியனை சுற்றித் திரிகிறது என்று ஆரம்பித்து, புதன், செவ்வாய், வெள்ளி, புவி, வியாழன், சனி, யூரேனஸ், நெஃப்ட்யூன் என்று 8-டன் நாம் நிறுத்திக் கொள்வதில்லை.

Advertisment

மாறாக ப்ளூட்டோவையும் 9வதாக உடனே அழைத்துச் செல்கின்றோம். ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே ப்ளூட்டோ சூரியக் குடும்பத்தின் ஒரு கோள் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது என்ற அப்டேட் பலருக்கும் சரியாக, முறையாக போய் சேரவில்லை என்று தெரிகிறது.

publive-image

உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை. நாசாவின் தலைமை அதிகாரிக்கே இதே பிரச்சனை தான். நாசாவின் தலைமை அதிகாரி ஒரு அரசியல் வாதி. அவரை நீங்கள் ஒரு விஞ்ஞானி என நினைத்திருந்தால், மன்னிக்க. அவர் அவர் அரசியல்வாதியே தான். அவரைக் கொண்டு வந்து ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமித்திருக்கின்றார்கள். பொழுது போக்கிற்காக அரசியலுக்கு வரும் தலைவர்கள் தேவையில்லாமல் ஏதாவது கூறி ட்ரோலுக்கு ஆளாவதைப் போல நாசாவின் தலைவர் ஜிம் ப்ரிடென்ஸ்டைன். இதை அனைவரும் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

ஜிம் பிரிடென்ஸ்டைன், அமெரிக்காவின் அதிபர் ட்ரம்பினால் நியமிக்கப்பட்டவர். எனவே அவரிடம் இதற்கு மேற்பட்டு நாம் எதையேனும் எதிர்பார்த்தால் அது நம்முடைய விஞ்ஞான அறிவுக்கு பாதகமும் பங்கமும் விளைந்துவிடும் என்பதால் நாம் அதை அங்கேயே விட்டுவிடுவோம். சில தினங்களுக்கு முன்பு, கோள்களுக்கான சில அம்சங்கள் இல்லாமல் போனதால் அந்த பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ப்ளூட்டோவை மீண்டும் கோளாக பதவி உயர்வு அளித்து அறிவித்திருக்கிறார் ஜிம் ப்ரிடென்ஸ்டைன். ஆனால் மக்களே, அவர் கூறினார் என்பதற்காக ப்ளூட்டோ 9வது கோளாக மாறிவிட இயலாது. மாற்றவும் முடியாது.

விண்வெளி துறையில் ஏற்படும் மாற்றங்கள், வைக்கப்படும் பெயர்கள், பட்டியலில் இணைப்பது, பட்டியலில் இருந்து ஒரு விண்வெளி ஆப்ஜெக்டை நீக்குவது போன்ற வேலைகள் அனைத்தும் சர்வதேச அமைப்பான International Astronomical Union (IAU) தான் முடிவு செய்கிறது.

 

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment