வீட்டு ‘நெட்’ கனெக்‌ஷனுக்கு இத்தனை இலவசங்களா? சன் நெக்ஸ்ட் ஆஃபரும் இருக்கு!

Jio fiber : வாடிக்கையாளர்கள் Amazon Prime Video வின் catalogue of movies மற்றும் நிகழ்ச்சிகளை அணுகும் வசதியையும் இலவசமாக வழங்குகிறது.

Corona virus, lockdown, Jio, JioFiber, JioFiber free OTT services, JioTV, JioCinema, JioSaavn, Disney+ Hotstar, SonyLIV, Zee5, SunNXT, Voot, AltBalaji, HoiChoi, Lionsgate Play, ShemarooME, Amazon Prime Video, JioFiber news, JioFiber news in tamil, JioFiber latest news, JioFiber latest news in tamil
Corona virus, lockdown, Jio, JioFiber, JioFiber free OTT services, JioTV, JioCinema, JioSaavn, Disney+ Hotstar, SonyLIV, Zee5, SunNXT, Voot, AltBalaji, HoiChoi, Lionsgate Play, ShemarooME, Amazon Prime Video, JioFiber news, JioFiber news in tamil, JioFiber latest news, JioFiber latest news in tamil

Sun NXT News In Tamil: கடந்த வருடம் JioFiber அறிமுகப்படுத்தப்படும் போது, ஜியோ எப்படி தொலைத்தொடர்பு சந்தையை சீர்குலைத்ததோ அது போல இதுவும் broadband சந்தையை சீர்குலைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட போது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை மேலும் அதன் திட்டங்கள் போட்டியாளர்களின் திட்டங்களைப் போன்றே இருந்தது. அதன்பிறகு நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களை திருத்தியமைத்து கூடுதல் டேட்டாவையும் Zee5, Amazon Prime Video போன்ற பல OTT தளங்களுக்கு இலவச சந்தாவையும் வழங்கியது.

JioFiber தனது broadband திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல OTT சேவைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

JioTV, JioCinema and JioSaavn

ரிலையன்ஸ் ஜியோ தனது Bronze, Silver, Gold, Diamond, Platinum மற்றும் Titanium ஆகிய அனைத்து JioFiber திட்டங்களுடன் பயனர்களுக்கு JioTV, JioCinema மற்றும் JioSaavn ஆகியவற்றுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த அனைத்து OTT தளங்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சொந்தமானவை.

வாடிக்கையாளர்கள் தொலைகாட்சியை நேரலையில் பார்க்கவும் வேறு பல நிகழ்ச்சிகளை பார்க்கவும் JioTV அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் JioCinema வில் திரைப்படங்களை காணவும், JioSaavn ல் இசையை கேட்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Disney+ Hotstar

JioFiber திட்டங்களில் Bronze திட்டம் தவிர மற்ற திட்டங்கள் அனைத்தும் Disney+ Hotstar VIP சந்தாவை உள்ளடக்கியது. திரைப்படங்கள், Hotstar Specials மற்றும் விளையாட்டுகளை நேரலையில் பார்க்க Disney+ Hotstar VIP அனுமதிக்கிறது.

SonyLIV

Disney+ Hotstar ஐ போல SonyLIV ம், Silver, Gold, Diamond, Platinum மற்றும் Titanium திட்டங்களின் கீழ் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. Sony ன் அனைத்து சொந்த உள்ளடக்கங்கள் (தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்), தொலைகாட்சி நேரலை மற்றும் நிகழ்ச்சிகளை பயனர்கள் அணுகுவதற்கான வசதியை வழங்குகிறது.

Zee5

வாடிக்கையாளர்கள் இந்த OTT தளத்தை அணுகும் வசதியை வழங்குவதற்காக Zee5 உடன் கூட்டு சேர்வதாக ஜியோ சமீபத்தில் அறிவித்தது. Silver, Gold, Diamond, Platinum அல்லது Titanium திட்டம் உள்ள அனைத்து JioFiber வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெற தகுதி பெறுகின்றனர்.

SunNXT மற்றும் Voot

Silver tier மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து திட்டங்களுடனும் JioFiber, SunNXT OTT சேவையை இலவசமாக வழங்குகிறது. இது பயனர்கள் பிராந்திய உள்ளடக்கத்தை அணுகுவதற்கு அனுமதிக்கிறது. மேலும் இந்த அனைத்து வாடிக்கையாளர்களும் Viacom 18’s Voot OTT சேவையை அணுகுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

AltBalaji

வயது வந்தவர்களுக்கான சூடான உள்ளடக்கத்தை வழங்குவதற்கு பெயர்போனது AltBalaji OTT சேவை. JioFiber ல் உள்ள Silver, Gold, Diamond, Platinum மற்றும் Titanium திட்டங்களில் உள்ள பயனர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கிறது.

HoiChoi

அனைத்து Silver, Gold, Diamond, Platinum மற்றும் Titanium திட்டங்களுடனும் HoiChoi கிடைக்கிறது. சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை இது முக்கியமாக வழங்குகிறது.

Lionsgate Play, ShemarooME

வாடிக்கையாளர்கள் சமீபத்திய பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சில சிண்டிகேட் நிகழ்ச்சிகளையும் அணுகுவதற்கான அனுமதியை Lionsgate Play, ShemarooME வழங்குகிறது. Silver மற்றும் அதற்கு மேலான அனைத்து திட்டங்களுடனும் இது கிடைக்கிறது.

Amazon Prime Video

Gold, Diamond, Platinum மற்றும் Titanium திட்டங்களுடன் Amazon Prime Video வுக்கான இலவச சந்தாவை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்குள் வாடிக்கையாளர்கள் Amazon Prime Video வின் catalogue of movies மற்றும் நிகழ்ச்சிகளை அணுகும் வசதியையும் இலவசமாக வழங்குகிறது. இதுதவிர Prime Music service, Prime Reading service ஆகியவற்றை அணுகும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun nxt news in tamil sun nxt free with jio fiber jio fiber offers

Next Story
சமச்சீரற்ற நிலையில் நிலா : தூரம் மற்றும் அருகில் இருப்பவைகள் ஏன் வேறுபடுகின்றன?Moon, Solar system, earth, moon asymmetry, why moon is asymmetric, far side moon, near side moon, moon, kreep
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express