Advertisment

எம்.டி.சி எப்போது வரும் என காத்திருக்க வேண்டாம்... பயணிகளுக்கு தமிழக அரசின் புதிய ஆப்

LAMB App for TNSTC சலோ இந்தியா என்ற ஆப் டெவலிப்பிங் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Government Locate and Access My Bus App

Tamil Nadu Government Locate and Access My Bus App

Tamil Nadu Government Locate and Access My Bus App : அன்பான சென்னைவாசிகளுக்கு ஒரு அசத்தல் செய்தி. ”தினமும் அவசர அவசரமா அரக்க பரக்க வேலைக்கு கெளம்பி ரெடியாகி பஸ் ஸ்டாண்ட் போய் நின்னா நம்மளோட எம்.டி.சி. வருதா, எங்கன வருது, இல்ல வரவே இல்லையா? வரவே வராதா என்று யோசிக்க யோசிக்க நம்ம பன்ச்சிங் டைமே முடிஞ்சு போய்டும். நம்மோட கவல கஷ்டத்தையெல்லாம் புரிஞ்சுக்கிட்ட கவர்மெண்ட் நமக்காக புதுசா ஒரு ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்னன்னா?” ஒன்னும் இல்லைங்க...

Advertisment

Tamil Nadu Government Locate and Access My Bus App

நம்முடைய ஓலா மற்றும் உபர் செயலிகள் போன்று, தமிழக அரசு பேருந்துகளும் செயல்பட இருக்கிறது. நம்முடைய பேருந்துகள் எங்கே இருக்கிறது முதற்கொண்டு, எத்தனை மணிக்கு நம்முடைய நிறுத்தத்திற்கு அது வரும், நமக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எது என அனைத்து தகவல்களையும் அளிக்கும் வகையில் செயலி ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

Locate and Access My Bus (LAMB) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை உருவாக்க முதற்கட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரண்டு போன்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். இதில் பேருந்தின் லைவ் லோகேஷன், எஸ்டிமேட்டட் டைம் ஆஃப் அரைவல் ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும். அக்யூரசி எவ்ளோனா வெறும் 1 நிமிடம் தான். பேருந்து கடக்க இருக்கும் அடுத்த 5 பேருந்து நிறுத்தங்களை அடிப்படையாக கொண்டு இந்த எஸ்டிமேட்டட் டைம் கால்குலேட் செய்யப்படுகிறது.

மொத்தம் 21,800 பேருந்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சலோ இந்தியா என்ற ஆப் டெவலிப்பிங் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்படும். மேலும் ஜியோ கோடிங்கிற்கு தேவையான கோட்களை போக்குவரத்து துறை பணியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பயண வாரண்ட் கேட்ட நடத்துனரை ரத்தம் வருமாறு தாக்கிய ஆயுதப்படை காவலர்கள்! வீடியோ உள்ளே

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment