Advertisment

தமிழுக்கான எமோஜியை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!

Tamil Spaces emojis introduced by Twitter Tamil News அதிர்வெண், அணுகல், படைப்பாற்றல் மற்றும் உரையாடல்களின் நோக்கத்தில் தமிழ் ஸ்பேசஸ் வளர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Spaces emojis introduced by Twitter Tamil News

Tamil Spaces emojis introduced by Twitter Tamil News

Tamil Spaces emojis introduced by Twitter Tamil News : லாக்டவுன் போடப்பட்டதால், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மிகவும் விரைவாகியுள்ளது. க்ளப்ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேஸ் என ஆடியோ செயலி, பெரும்பாலான மக்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ட்விட்டர் தமிழ் ஸ்பேஸ் பிரேத்தியேக எமோஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது #TamilSpaces, #TamilSpace, #தமிழ்Spaces மற்றும் #தமிழ்Space ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் செயல்படுத்தலாம்.

Advertisment

இந்த எமோஜி ஒரு ஊதா-நீல மைக்ரோஃபோனை தமிழ் எழுத்துக்களின் முதல் எழுத்து (‘அ) உடன் சித்தரிக்கிறது. இது நிச்சயம் தமிழ் மொழி பார்வையாளர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

"ட்விட்டரின் மிகவும் ஆற்றல்மிக்க பயனர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்களும் அடங்குவர். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அனைவருக்கும் ஸ்பேசஸ் கிடைக்கப்பெற்ற பிறகு, அதிர்வெண், அணுகல், படைப்பாற்றல் மற்றும் உரையாடல்களின் நோக்கத்தில் தமிழ் ஸ்பேசஸ் வளர்ந்துள்ளது. இந்த பிரபலத்தைப் பார்த்து, சேவையில் #TamilSpaces உரையாடல்களை ஊக்குவிக்கவும் அங்கீகரிக்கவும் நாங்கள் விரும்பினோம்.

எனவே, சுவாரசியம் மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கத் தனிப்பயன் எமோஜியை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் ஈடுபாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம். மேலும், #TamilSpaces-ல் நடக்கும் அனைத்து அருமையான விஷயங்களைப் பற்றிய காலவரிசையின் உரையாடலை எமோஜி ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என ட்விட்டர் இந்தியாவின் கூட்டாண்மை மேலாளர் செரில்-ஆன் குடோ தெரிவித்துள்ளார்.

எமோஜிகள் குறிப்பிட்ட உரையாடல்களில் மக்களை அடையாளம் காணவும் பங்கேற்கவும் உதவுகின்றன. மேலும், உரையில் சுவாரசியம் மற்றும் வண்ணங்களைச் சேர்க்கின்றன. #TamilSpaces எமோஜியை அறிமுகப்படுத்தியதைக் கொண்டாடும் வகையில், பாடகி சின்மயி (@Chinmayi) ஆகஸ்ட் 6-ம் தேதி ஒரு மெய்நிகர் இசை நிகழ்ச்சியை நடத்தினார் மற்றும் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்வீட் செய்யும் சில ரசிகர்களிடமிருந்து பாடல் கோரிக்கைகளைப் பாடவும் செய்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment