Advertisment

டாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி ?

பல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tata sky recharge offer

tata sky recharge offer

Tata Sky channel plans and prices :  டாட்டா ஸ்கை உள்ளிட்ட பல்வேறு டி.டி.எச். சேவை நிறுவனங்கள், ட்ராயின் புதிய கேபிள் டிவி கொள்கைகள் மூலம் தங்களின் சேனல்களுக்கான கட்டணங்கள், புதிய பேக்குகள் என அனைத்தையும் மாற்றி வருகின்றன. டாட்டா ஸ்கை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிக குழப்பம் இல்லாத வகையில் தங்களின் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Advertisment

புதிய ட்ராய் கொள்கைகளின் படி பராமரிப்பு பணிகளுக்காக நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் என்று ரூ.153 கட்ட வேண்டும். இதில் ஜி.எஸ்.டியும் அடக்கம். முதல் 100 சேனல்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். அதற்கு மேல் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் ரூபாய் 20-ஐ நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸாக கட்ட வேண்டும்.

டாட்டா ஸ்கை வழங்கும் புதிய பேக்குகள் மற்றும் அதன் விலைப்பட்டியல்

மொத்தம் 13 வித்தியசமான பேக்குகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது டாட்டா ஸ்கை. ஃபிரி டூ ஏர் எனப்படும் இலவச சேனல்களுக்கான Basic FTA பேக்கை நீங்கள் கட்டணம் இல்லாமல் பார்க்கலாம்.

Pan-India Curated Packs - இதன் கீழ் 14 புதிய ப்ளான்கள் உள்ளன. ஹிந்தி பச்சாத் என்ற ப்ளானில் 31 சேனல்களை பார்ப்பதற்கு நீங்கள் ரூ.179ஐ மாதக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதில் அதிக கட்டணம் உள்ள பேக் என்றால் அது 134 சேனல்களை கொண்ட ப்ரீமியம் ஸ்போர்ட்ஸ் இங்கிலீஸ் எச்.டி. பிளான் ஆகும். இதன் விலை ரூ.745.

ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா போன்ற பிராந்தியங்களுக்கு ஏற்றவாறு பிளான்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம்.

Tata Sky Regional Packs

இந்த பேக்குகளின் கீழ் 33 பிராந்திர மொழிகளுக்கான சேனல் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது டாட்டா ஸ்கை. குஜராத்தி மொழிகளுக்கான பேக்கை 7 ரூபாயில் பார்க்க இயலும். தமிழ் ரீஜினல் எச்.டி. பேக்கின் மாத கட்டணம் ரூபாய் 164 ஆகும்.

Tata Sky Add On/Mini Packs

இதில் 27 புதிய ப்ளான்கள் உள்ளன. முழுக்க முழுக்க க்ரிக்கெட், இசை, லைஃப் ஸ்டைல், மூவிஸ், குழந்தைகளுக்கான சேனல்கள் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Broadcaster Packs

இந்த பேக்கின் கீழ் 16 திட்டங்கள் செயல்பட உள்ளன. ஜீ, டிஸ்னி. என்.டி.டி.வி., டிஸ்கவரி போன்று பல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.

மேலும் படிக்க : ஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி?

Trai Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment