Tata Sky Flexi Annual Plan Revised : டாட்டா ஸ்கையில் புதிதாக இணைய இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபரை வழங்கி அசத்தியுள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம். இது முழுக்க முழுக்க வருடாந்திர ஃப்ளெக்ஸி ப்ளான்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நோட் செய்துகொள்ளுங்கள்.
Tata Sky Flexi Annual Plan Revised
ட்ராய் உருவாக்கிய புதிய கேபிள் டி.வி.சட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்கள் டாட்டா ஸ்கை நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்டது வருடாந்திர ஃப்ளக்ஸி ப்ளான் (Tata Sky annual flexi plan). அந்த ப்ளான் படி, ஒரு சந்தாதாரர் ஒரு வருடத்திற்கான மொத்த தொகையான ரூ. 3,600-ஐ செலுத்தும் போது. அவருக்கு ரூ. 300 கேஷ்பேக்காக அவருக்கு கிடைக்கும். ஆனால் அது அவர்களின் சந்தா துவங்கி 13வது மாதத்தில் தான் கிடைக்கும்.
ஆனால் தற்போது அந்த கேஷ்பேக்கினை, வாடிக்கையாளர்கள், பணம் செலுத்திய 48 மணி நேரத்திலேயே திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம். புதிதாக ஃப்ளெக்ஸி ப்ளான்களை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே இன்ஸ்டாண்ட் கேஷ்பேக் பெற இயலும். ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் சேனல்களை பெறும் வாடிக்கையாளர்கள் மாத இறுதியில் தங்களின் ரூ. 300-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : சாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி!