Advertisment

சாம்சங் முதல் விவோ வரை.. 6 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. இதில் பெஸ்ட் போன் எது?

Galaxy S23 Ultra முதல் Vivo X80 Pro வரை 6 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், விலை உள்பட பல்வேறு விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
சாம்சங் முதல் விவோ வரை.. 6 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. இதில் பெஸ்ட் போன் எது?

அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் முக்கிய பொருளாக மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் இ.பி கட்டணம், வாடகை செலுத்துவது வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோம். இளைஞர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனங்களும் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 6 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் இளைஞர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

சாம்சங் முதல் விவோ வரை பல்வேறு நிறுவனங்கள் 6 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றில் சிறந்த போன், அதன் சிறப்பம்சம், விலை உள்பட பல்வேறு விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

Samsung Galaxy S23 Ultra

Samsung Galaxy S23 Ultra ஆனது, zoom photography (ஜூம் புகைப்படம் ) எடுப்பதற்கு சிறந்த போனாக உள்ளது. 200MP சென்சார் கொண்டுள்ளது. அதன் 100x ஜூம் திறன்கள் பெரும்பாலும் டிஜிட்டலாக இருக்கும். ஜூமிங்கிற்காக பிரத்யேகமாக 3x மற்றும் 10x டெலிஃபோட்டோ லென்ஸ்களை இந்த போன் கொண்டுள்ளது. ரிவ்யூ அடிப்படையில் இந்த போன் ஜூம்மிங் வசதியில் குறைந்தபட்சம் நாய்ஸ் (Noise) உடன் போட்டோ விவரங்கள் துல்லியமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. Samsung Galaxy S23 Ultra ஆனது ரூ.1,24,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Samsung Galaxy S22 Ultra

Galaxy S22 Ultra போன் Samsung Galaxy S23 Ultra-வின் முந்தைய பதிப்பாகும். இது ரூ.94,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் சிறந்த போட்டோ ஜூமிங் அம்சத்தை வழங்குகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் 108MP முதன்மை சென்சார், 12MP அல்ட்ராவைடு மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. 3x மற்றும் 10x லென்ஸ்கள் நன்கு வேலை செய்கின்றன.

Vivo X80 Pro

Vivo X80 Pro-வும் கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆகும். எல்லா வகையான போட்டோகிராபிக்கும் தகுந்தாற்போல் லென்ஸ்கள் உள்ளன. 50எம்பி சாம்சங் ஜிஎன்வி பிரைமரி, சோனி ஐஎம்எக்ஸ்598 சென்சார் கொண்ட 48எம்பி அல்ட்ராவைடு, ஐஎம்எக்ஸ்663 உடன் 12எம்பி 2எக்ஸ் போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் ஜூம் செய்ய உதவும் 8எம்பி சென்சார் (5x ஆப்டிகல்) இந்த போனில் கொடுக்கப்பட்டு உள்ளது. Galaxy S22 Ultra வழங்கும் 10x ஆப்டிகல் ஜூம் உடன் ஒப்பிடும்போது இந்த போன் குறைவான திறன் கொண்டிருந்தாலும் 60x டிஜிட்டல் முறையில் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

பிக்சல் 7 ப்ரோ

பிக்சல் 7 ப்ரோவில் 50 எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ராவைடு மற்றும் 48 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ்கள் 5x ஆப்டிகல் ஜூம் உடன் வழங்குகிறது.

OnePlus 10 Pro

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 ஆனது 2x ஆப்டிகல் ஜூமிங்கை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் OnePlus 10 Pro 3.3x ஜூம் செய்யும் திறன்களுடன் வழங்குகிறது. இந்த போன் 48MP பிரதான கேமரா, 50MP அல்ட்ராவைட் மற்றும் 8MP 3.3x ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment