Advertisment

நத்திங் ஃபோன் 2 முதல் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 வரை: 2023-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 ஸ்மார்ட் போன்கள் இங்கே!

நத்திங் ஃபோன் 2, கேலக்ஸி இசட் ஃபோல்டு 5, iQOO Neo 7 Pro மற்றும் பல போன்கள் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

author-image
sangavi ramasamy
New Update
Top 5 most-anticipated smartphones of 2023

Top 5 most-anticipated smartphones of 2023

நத்திங் ஃபோன் 2 முதல் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 வரை இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 5 (Galaxy Z Fold 5)

சாம்சங் தனது ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களிடையே தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது, நிறுவனம் இப்போது அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் ஃபோல்டபுள் இசட் ஃபோல்டு 5- ஸ்மார்ட் போனை ஜூலை பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy Z Fold 4 போனில் இருந்து சில மாறுபாடுகளை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

அப்கிரேடேட் OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC மற்றும் மேம்படுத்தப்பட்ட அண்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெறுகிறது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5)

Galaxy Z Flip 5 பெரிய கவர் டிஸ்பிளேயைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Fold 5 போலவே, Flip 5 ஆனது Snapdragon 8 Gen 2 SoC ஐ அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படும் என கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் ஃபோன் 2 (Nothing Phone (2))

போன் (2) என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றொரு போன் ஆகும். Nothing Phone (2) ஆனது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நத்திங் ஃபோன் 2 ஓஎஸ் (2) ஐ மூலம் செயல்படும் என்றும், பின்புறத்தில் மேம்படுத்தப்பட்ட கிளிஃப் லைட்டிங் பேக் செய்யும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஸ்மார்ட்ஃபோன் பின்புறத்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பை பேக் செய்யும் என்று ஊகிக்கப்படுகிறது.

,

மோட்டோரோலா Razr 40 சீரிஸ் (Motorola Razr 40 series)

இந்தியாவில் Razr 40 மற்றும் Razr 40 Ultra ஐ அறிமுகப்படுத்தப்படும் என மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது. இது அமேசானில் பிரத்தியேகமாக கிடைக்கும். மோட்டோரோலாவும் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்களாக அறிமுகப்படுத்துகிறது.

விலையுயர்ந்த Razr 40 Ultra ஆனது ஃபிளிப்-ஸ்டைல் ​​மடிக்கக்கூடிய மிகப்பெரிய 3.6-இன்ச் pOLED கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது உலகின் மிக மெல்லிய ஃபிளிப் ஃபோன் என்றும் கூறப்படுகிறது.

iQOO நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro)

iQOO நியோ 7 ப்ரோ ஜூலை 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் படி, நியோ 7 ப்ரோ ஒரு டூயல்-சிப் ஃபோன் ஆகும், இதில் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC மற்றும் ஒரு இன்டிபெண்டன்ட் கேமிங் சிப் உள்ளது.

,

ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபோன் ஆரஞ்சு நிற ஃபாக்ஸ் லெதர் பேனலைக் கொண்டிருக்கும் மற்றும் FunTouchOS இல் இயங்கும். iQOO Neo 7 Snapdragon 8+ Gen 1 SoC-அடிப்படையிலான போன்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment