Advertisment

விவோவின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் iQOO : ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள்!

விவோவின் சார்ஜர் 44வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போனை வெறும் 45 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vivo iQOO gaming smartphone first look

Vivo iQOO gaming smartphone first look

Vivo iQOO gaming smartphone first look : சீனாவில் கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்தது விவோவின் இக்கூ. இந்தியாவில் இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவில்லை. ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசரின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேமில் இயங்குகிறது. 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், மூன்று பின்பக்க கேமராக்கள், மற்றும் கேமிங் ஃபீச்சர்களுடன் கூடிய ப்ரெஷர் சென்சிடிவ் பட்டன்களை இரண்டு பக்கமும் கொண்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது விவோ வி17 ஸ்மார்ட்போன்!

publive-image 3டி க்ளாஸ் பாடி வடிவமைப்பு மற்றும் வெர்ட்டிக்கிள் எல்.ஈ.டி ஸ்ட்ரிப் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. 6.41 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த கேமிங் ஸ்மார்ட்போன். இதன் ரெசலியூசன் 2,340 x1,080 பிக்சல்களாகும். புகைப்படம் கரன்வீர் சிங் அரோரா

publive-image மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 12 எம்.பி. சோனி IMX363 பிரைமரி சென்சார் கொண்டுள்ளது. 12 எம்.பி. வைட் ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

publive-image இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொறுத்தப்பட்டிருக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் ஹையர் எண்ட் வெர்சனாகும்.

publive-image விவோவின் சார்ஜர் 44வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போனை வெறும் 45 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட இயலும். பேட்டரி செயற்திறன் 4,000mAh ஆகும்.

publive-image விவோ 44வாட்ஸ் சூப்பர்ஃப்ளாஷ் சார்ஜிங் டெக்னாலஜி 6ஜிபி ரேம் வேரியண்ட்டில் இல்லை என்பது மட்டு கொஞ்சம் வருத்தமான விசயம்.

publive-image நீங்கள் நிறைய நேரம் விளையாடினாலும் கூட இந்த ஸ்மார்ட்போனை சில்லுனு வைத்துக் கொள்ள சூப்பர் லிக்விட் கூலிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

publive-image 6GB RAM+128GB ROM என்ற ஸ்டோர்ஜூடன் கூடிய ஸ்மார்ட்போனின் விலை 2,998-ல் ஆரம்பமாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 31,700 ஆகும்.

Vivo Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment