Advertisment

VLC Media Player-க்கு இந்தியாவில் தடை? விவரம் உள்ளே!

VLC மீடியா பிளேயர் இணையதளம் பல மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது தான் இது பேசு பொருளாக மாறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VLC Media Player-க்கு இந்தியாவில் தடை? விவரம் உள்ளே!

இந்தியாவின் மிக பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று VLC மீடியா பிளேயர். இந்தநிலையில், இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. VLC மீடியா ப்ளேயர் இணையதளம் இனி இந்தியாவில் இயங்காது, மேலும் பயனர்கள் windows executable file-ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பயனர் ஒருவர் VLC மீடியா பிளேயர் இணையதளத்தை பயன்படுத்த முயன்றுள்ளார். அப்போது இந்தியா அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது. ககன்தீப் சப்ரா என்பவர் விஎல்சி மீடியா பிளேயர் இணையதளத்தை பயன்படுத்த முயன்றுள்ளார். அப்போது, ஐடி சட்டம், 2000-இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி இணையதளம் தடை செய்யப்பட்டுள்ளது என வந்துள்ளது.

இருப்பினும் இதன் மொபைல் வெர்ஷன் பயன்பாட்டில் உள்ளது. VLC மீடியா பிளேயர் (the Android app) பயன்பாட்டில் உள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்துவர்களுக்கு கூகுள் பிளே ஸ்டோரில் மொபைல் வெர்ஷன் கிடைக்கிறது. VLC மீடியா பிளேயர் இணையதள வெர்ஷன் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மொபைல் வெர்ஷனும் தடை செய்யப்படுமா எனத் தெரியவில்லை.

ஆனால் முன்னதாக ஃபோன் அல்லது லேப்டாப், கணினியில் VLC மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், அதனை தற்போதும் பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் windows executable file இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்த முடியும்.

VLC Media Player-க்கு இந்தியாவில் திடீர் தடை ஏன்?

மீடியாநாமா அறிக்கையின்படி, VLC மீடியா பிளேயர் ஐந்து மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VLC மீடியா பிளேயர் ஏன் தடைசெய்யப்பட்டது என VLC மீடியா பிளேயர் நிறுவனமோ, இந்திய அரசோ விளக்கம் அளிக்கவில்லை. சீனா ஆதரவு ஹேக்கிங் குழுவான சிகாடா இந்த தளத்தை பயன்படுத்தினர். சைபர் தாக்குதல்களுக்கு இந்த தளத்தை பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெரிய சைபர் தாக்குதல் பின்னணி கொண்டு, சிகாடா VLC மீடியா பிளேயர் மூலம் தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

India Technology Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment