பிரத்யேக செயலியாக வெளிவரும் “வாட்ஸ்அப் பிஸினஸ்”... டவுண்லோடுக்கு தயார்!

வாட்ஸ்அப் பிஸினஸ் செயலியின் ஏ.பி.கே ஃபைல் தயார் என தகவல்

வாட்ஸ் நிறுவனமானது வாட்ஸ்அப் பிஸினஸ் செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவந்த நிலையில், அதற்கான ஏ.பி.கே ஃபைல் தயாராகியுள்ளதாக தகவல் வெளயாகியுள்ளன. இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலில் முக்கித்துவம் வாய்ந்த வாட்ஸ்அப்-க்கு, உலகம் முழுவதும் சுமார் 1.2 பில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்-க்கு சுமார் 200 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனமானது வாட்ஸ்அப் பிஸினஸ் என்ற புதிய செயலியை திட்டமிட்டிருந்தது. வர்த்தக நோக்கில் உருவாக்கப்படும் இந்த செயலி, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு முக்கியமான வருமானம் ஈட்டித்தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக வாட்ஸ்அப் பிஸினஸ் செயலி குறித்த செய்திகள் வெளியாகிவந்தன. இந்த நிலையில், வாட்ஸ்அப் பிஸினஸ் செயலின் ஏ.பி.கே ஃபைல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆண்ட்ராய்டுபோலீஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வர்த்தக தொடர்பான சேவை குறித்து வாட்ஸ்அப் சர்வே நடத்தியிருந்தது. தற்போதைய நிலையில், சர்வே மூலமாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த வாட்ஸ் அப் பிஸினஸ் செயலியை பயன்படுத்த முடியுமாம்.

முன்னதாக, புக் மை ஷோ (BookMyShow) நிறுவனமானது, வாட்ஸ்அப் பிஸினஸ் புரோகிராமுடன் இணைந்திருந்தது. இதனையடுத்து, புக் மை ஷோ நிறுவனமானது முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை வாடிக்கையாளிர்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் பிஸினஸ் செயலி(ஏ.பி.கே ஃபைல்) டவுண்லோடு செய்வதற்கு தயாராக உள்ளதாக ஆண்ட்ராய்டுபோலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி, வாட்ஸ்அப் பிஸினஸ் செயலில், தனிநபர் கணக்கு மற்றும் பிஸினஸ் கணக்கு என தனித்தனியாக பயன்படுத்த முடியுமாம். லேண்ட்லைன் சப்போர்ட் கூட இதில் என்று கூறப்படும் நிலையில், இது எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்தே தெரிந்து கொள்ள முடியும். சாதாரண வாட்ஸ்அப் கணக்குகளில் லேண்ட்லைன் சப்போர்ட் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close