Advertisment

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாடு இப்போது விண்டோஸ் ஸ்டோரிலும் கிடைக்கும்!

Whatsapp desktop app available on windows store how to download Tamil News நிலையான அனுபவத்திற்காக, தற்போதைக்கு வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக இப்போது பல சாதன ஆதரவைக் கொண்டிருப்பதால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp desktop app available on windows store how to download Tamil News

Whatsapp desktop app available on windows store how to download Tamil News

Whatsapp desktop app available on windows store how to download Tamil News : விண்டோஸ் அடிப்படையிலான பிசிக்களில் பயன்படுத்த வாட்ஸ்அப் ஒரு தனி டெஸ்க்டாப் செயலியில் வேலை செய்து கொண்டிருந்தது. இறுதியாக இப்போது அந்த பயன்பாடு வந்துவிட்டது மற்றும் பதிவிறக்கம் செய்யவும் கிடைக்கிறது. இருப்பினும் இன்னும் அது பீட்டா வெர்ஷனில் உள்ளது மற்றும் Microsoft Windows App Store-லிருந்து பதிவிறக்கம் செய்யத் தயாராக உள்ளது. இது வாட்ஸ்அப் வெப்பிற்கு மாற்றாக இருக்கும்.

Advertisment

பிரத்தியேக விண்டோஸ் ஆப் மூலம், பயனர்கள் இனி கூகுள் க்ரோம், Microsoft Edge, Firefox போன்ற ப்ரவுசர்களை நம்பி வாட்ஸ்அப் வெப்பை திறந்து பயன்படுத்த வேண்டியதில்லை. x64 கட்டமைப்பின் அடிப்படையிலான CPU மற்றும் Windows 10 பதிப்பு 14316.0 அல்லது அதற்கும் அதிகமானவை பயன்பாட்டை இயக்க கணினித் தேவைப்படும்.

விண்டோஸுக்கான வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

ஸ்டெப் 1: மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோருக்குச் செல்லவும்

ஸ்டார்ட் மெனுவைத் திறந்து ‘ஸ்டோர்’ என டைப் செய்வதன் மூலம் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஸ்டோரைத் திறக்கலாம். முதல் முடிவு, விண்டோஸ் ஸ்டோர் பயன்பாடாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 2: வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைத் தேடுங்கள்

மேலே உள்ள தேடல் பட்டியில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைத் தேடுங்கள். நீங்கள் பயன்பாட்டை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். பயன்பாட்டைப் பதிவிறக்கத் தொடங்க, 'Get' பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பை அமைத்துப் பயன்படுத்தவும்

மொபைலில் வாட்ஸ்அப்பை நிறுவும் போது நீங்கள் செய்வது போல், உங்கள் விவரங்களை உள்ளிட்டுப் பயன்பாட்டை அமைக்கவும். இப்போது பயன்படுத்தத் தயாராக இருக்கிறீர்கள்.

publive-image

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்: நிறுவும் முன் கவனிக்க வேண்டியவை

இந்தப் பயன்பாடு இன்னும் பீட்டாவில் இருப்பதால், ஆரம்ப கட்டத்தில் சில சிக்கல்களையும் பிழைகளையும் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 11-ல் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிழப்பதாக ஆப்ஸின் மதிப்பாய்வுப் பிரிவில் உள்ள பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். நிலையான அனுபவத்திற்காக, தற்போதைக்கு வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக இப்போது பல சாதன ஆதரவைக் கொண்டிருப்பதால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பும் தற்போது உள்ளது. இது பெரும்பாலும் உங்கள் ஸ்மார்ட்போனுடன் பயன்படுத்தப்படுவதையே சார்ந்துள்ளது மற்றும் சுயாதீனமாக இல்லை. எனவே ஃபோன் இல்லாமலேயே உங்கள் கணினியில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த விரும்பினால், மல்டி டிவைஸ் லிங்க்கிங் வழியாக வாட்ஸ்அப் வெப் மட்டுமே இப்போதைக்கு உங்களின் ஒரே தேர்வாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment