Advertisment

வாட்ஸ் அப்-ல் advanced search - கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்

WhatsApp New Advanced Search Feature: இப்போது புகைபடங்கள், GIFs மற்றும் மற்ற விஷயங்களையும் தேடலாம். ஒளிப்படங்கள் (videos), ஆவணங்கள் மற்றும் இணைப்புகளையும் இந்த புதிய வசதியை பயன்படுத்தி தேடலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp feature new advanced search

WhatsApp feature new advanced search

WhatsApp feature: வாட்ஸ் அப்பில் உள்ள ஒரு மறைக்கப்பட்ட அம்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் தேடலைவிட இன்னும் அதிகமான உஙகளால் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாட்ஸ் அப்பின் advanced search பல ஆவணங்களையும், இணைப்புகளையும் (documents and links) தேட உங்களுக்கு உதவும் என்பது இன்னும் பலருக்கு தெரியாது. பேஸ்புக்’கால் நிர்வகிக்கப்படும் இந்த ஆப்பில் advanced search என்ற ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் பல பயனர்களால் கவனிக்கப் படவில்லை. இந்த அம்சம் Android மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது.

Advertisment

advanced search என்றால் என்ன? அது எப்படி பயன்படுகிறது ?

ஒரு வாட்ஸ் அப் குழுவில் அல்லது தனிப்பட்ட அரட்டையில் (chat) முன்பு ஒரு டெக்ஸ்ட்டை தேடுவதற்கான ஏற்பாடு இருந்தது. இப்போது புகைபடங்கள், GIFs மற்றும் மற்ற விஷயங்களையும் தேடலாம். ஒளிப்படங்கள் (videos), ஆவணங்கள் மற்றும் இணைப்புகளையும் இந்த புதிய வசதியை பயன்படுத்தி தேடலாம்.

வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா? அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது?

வாட்ஸ் அப் செயலியின் மேல் பகுதியில் உள்ள search icon ஐ சாதாரணமாக சொடுக்கி இந்த Advanced Search அம்சத்தின் மூலம் பயனர்கள் தேடலாம். இந்த application அந்த சொல் தொடர்பான அனைத்து உள்ளடக்கத்தையும் தேடி அந்த சொல் தொடர்புடைய அனைத்து டெக்ஸ்ட்களையும் chat history லிருந்தும், மேலும் அது தொடர்புடைய புகைபடங்கள், ஒளிபடங்கள் மற்றும் தேடல் தொடர்புடைய இணைப்புகளையும் காண்பிக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் தீபாவளி என்று தேடினால் அது தொடர்புடைய குறுஞ்செய்திகளை மட்டும் கொண்டுவராது. தீபாவளி தொடர்பாக அங்குள்ள அனைத்து படங்கள் அல்லது அது தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கட்டுரைகளையும் கொண்டுவரும்.

இந்த அம்சம் படிப்படியாக வெளியிடப்படுகிறது. எனவே இது சில பயனர்களுக்கு தற்போது கிடைக்காது. ஆனால் அனைவருக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலி அப்டேட் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment