Advertisment

வாட்ஸ்அப்பில் தடுப்பூசி செலுத்தும் இடங்களை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி?

Whatsapp how to easily book vaccination slot Tamil News தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கப் பயனர்கள் அதே சாட்போட்டைப் பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
New Update
Whatsapp how to easily book vaccination slot Tamil News

Whatsapp how to easily book vaccination slot Tamil News

Whatsapp how to easily book vaccination slot Tamil News : வாட்ஸ்அப் இப்போது உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டறிந்து, எளிதாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறது. நாடு முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது அரசாங்கத்தின் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட்டில், தடுப்பூசி ஸ்லாட்டை வாட்ஸ்அப் எண் 9013151515-க்கு வெறுமனே 'புக் ஸ்லாட்' அனுப்புவதன் மூலம் பயன்படுத்தலாம்.

Advertisment

வாட்ஸ்அப்பில் இந்த சாட்போட், மார்ச் 2020-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது COVID-19 தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சுற்றியுள்ள தவறான தகவல்களைத் தடுக்கவும் உதவும். தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கப் பயனர்கள் அதே சாட்போட்டைப் பயன்படுத்தலாம். இப்போது வரை, பயனர்கள் CoWIN-ன் வலைத்தளம் வழியாகத் தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்ய முடிந்தது. இனி, வாட்ஸ்அப்பில் ஒரு தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்வது எப்படி என்பது இங்கே.

வாட்ஸ்அப்பில் தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்வது எப்படி?

ஸ்டெப் 1: பயனர்கள் 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணை தங்கள் தொலைபேசியில் சேமிக்க வேண்டும்.

ஸ்டெப் 2: "புக் ஸ்லாட்" என டைப் செய்து வாட்ஸ்அப்பில் சேமித்த எண்ணுக்கு அனுப்பவும். இது அந்தந்த மொபைல் போன் எண்ணில் 6 இலக்க ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்கும். நீங்கள் சாட்டில் அந்த OTP-ஐ அனுப்ப வேண்டும்.

ஸ்டெப் 3: நீங்கள் OTP-ஐ உள்ளிட்டவுடன், CoWIN இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்களை போட் காட்டும்.

ஸ்டெப் 4: நீங்கள் தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்ய விரும்பும் பயனரின் எண்ணை இப்போது டைப் செய்ய வேண்டும். இப்போது போட் உங்கள் முந்தைய தடுப்பூசி விவரங்களைக் காண்பிக்கும்.

ஸ்டெப் 5: இப்போது "அஞ்சல் குறியீடு (பின்கோட்) மூலம் தேடு" என்பதை க்ளிக் செய்யவும். இப்போது, போட் நீங்கள் தடுப்பூசிக்குப் பணம் செலுத்த வேண்டுமா அல்லது இலவசமாக வேண்டுமா என்று கேட்கும்.

ஸ்டெப் 6: நீங்கள் இப்போது உங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டை உள்ளிட வேண்டும். பயனர்கள் அஞ்சல் எண் மற்றும் தடுப்பூசி வகையின் அடிப்படையில் விருப்பமான தேதி மற்றும் இடத்தை தேர்வு செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment