புத்தாண்டு அன்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ் ஆப் மெசேஜ் எத்தனை தெரியுமா?

டிசம்பர் 31-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார் 75 பில்லியன் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார் 75 பில்லியன் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 20 பில்லியன் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 200 மில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் இந்தியாவில் அதிகபட்சமாக 20 பில்லியன் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமாக 75 பில்லியன் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 13 பில்லியன் புகைப்படங்கள் மற்றும் 5 பில்லியன் வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளன. டிசம்பர் 21 இரவு முதல் ஜனவரி 1 காலை வரை இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலி மெதுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close