Advertisment

WhatsApp Web: எளிய வழியில் தகவல் பறிமாற்றம், அப்டேட் ஆகிவிட்டீர்களா?

WhatsApp : உங்கள் கணினியில் வாட்ஸ் ஆப்பை இரண்டு வழிகளில் அணுகலாம் - ஒன்று வாட்ஸ் ஆப் வலை பதிப்பு மூலமாக. இது ஒரு browser-based application மேலும் இது Google Chrome போன்றவற்றில் வேலை செய்யும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp web, how to use whatsapp web, web.whatsapp.com, whatsapp web tricks, whatsapp web tips, whatsapp tips, whatsapp desktop, whatsapp web beginners guide, வாட்ஸ் ஆப் வெப்

whatsapp web, how to use whatsapp web, web.whatsapp.com, whatsapp web tricks, whatsapp web tips, whatsapp tips, whatsapp desktop, whatsapp web beginners guide, வாட்ஸ் ஆப் வெப்

WhatsApp Web: வாட்ஸ் ஆப் தனது வலை பதிப்பை (web version) ஜனவரி 2015 ல் அறிமுகப்படுத்தியதிலிருந்து உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்தியிடல் ஆப்பை கணினி அல்லது மடிக்கணினி வழியாக பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

Advertisment

வாட்ஸ் ஆப்பின் வலை பதிப்புக்கு மக்கள் மத்தியில் இவ்வளவு ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம், இதை மின்னஞ்சல்களுக்கு மாற்றாக எளிதாக கோப்புகளை பகிர்வதற்கு, தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு மற்றும் தொழில்முறை செய்தியிடல்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்பதே.

ஆசிட் அட்டாக்கை நியாயப்படுத்தும் வீடியோ : பிரபலத்தின் கணக்கை முடக்கிய டிக்டாக்

வாட்ஸ் ஆப்பின் வலை பதிப்பு பயனரின் கைபேசியில் உள்ள தரவுகளை (messages, contacts, images etc.) வெறுமனே கண்ணாடி போல கணினியில் பிரதிபலிக்கிறது. இது கைபேசி பதிப்பின் நீட்டிப்பாக செயல்படுகிறது.

ஆயினும்கூட, வலை கிளையண்டில் (web client) நிறைய சுவாரஸ்யமான திறன்கள் உள்ளன, மேலும் வாட்ஸ்அப் வலை பதிப்பை முழுமையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கணினியில் வாட்ஸ் ஆப்பை இரண்டு வழிகளில் அணுகலாம் - ஒன்று வாட்ஸ் ஆப் வலை பதிப்பு மூலமாக. இது ஒரு browser-based application மேலும் இது Google Chrome போன்றவற்றில் வேலை செய்யும். இரண்டாவது வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப் மூலமாக. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேஷன், இதை நீங்கள் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் browser ஐ ஒவ்வொரு முறை திறக்கும் தேவையை தவிர்க்கலாம்.

நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் குறுஞ்செய்திகள் உங்கள் கைபேசி ஆப் மற்றும் வலை கிளயண்டிலும் நிகழ்நேரத்தில் ஒத்திசைக்கப்படும். எனவே இரண்டு தளங்களிலும் வாட்ஸ் ஆப் இயங்கும் போதும் கூட நீங்கள் தகவல்களை பார்க்கவும் புதிப்பிக்கவும் செய்யலாம்.

வலை ஆப்பை அணுக நீங்கள் கைபேசி ஆப்பில் மேல் வலது மூலையில் உள்ள Menu/ Settings ஐ தட்டி அடுத்து WhatsApp Web ஐ சொடுக்கவும். இதற்கு பிறகு வலை கிளையண்டை இயக்க மற்றும் உங்கள் தரவை ஒத்திசைக்க நீங்கள் உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு unique one-time QR code ஐ ஸ்கேன் செய்யவேண்டும்.

உங்கள் வங்கி... உங்கள் கையில்..! மொபைல் பேங்கிங் எளிய ஸ்டெப்ஸ்

நீங்கள் வலை பதிப்பை பயன்படுத்துகிறீர்களா இல்லை கைபேசி ஆப்பை பயன்படுத்தி ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்களா என்பதை குறுஞ்செய்தியை பெறுபவரால் கண்டுபிடிக்கவே முடியாது.

Uploading status updates, உங்கள் profile படத்தை மாற்றுவது, மேலும் நீளமான செய்திகளை தட்டச்சு செய்வது போன்றவை கைபேசி பதிப்பை காட்டிலும் வலை பதிப்பில் செய்வது எளிது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whats App
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment