Advertisment

இந்த வேலையை இனி வாட்ஸ் ஆப் செய்யும்: வங்கிக்கு போக வேண்டாம், புது ‘ஆப்’ தேவையில்லை

WhatsApp Payments ஐ எவ்வாறு கட்டமைத்து உங்கள் வங்கி கணக்குடன் இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp Payments, வாட்ஸ் ஆப்

WhatsApp Payments, வாட்ஸ் ஆப்

WhatsAPP Tamil News: தற்போதைய நோய் தொற்று காரணமாக நம்மில் பெரும்பாலோர் முடிந்தவரை மற்றவர்களுடன் குறைந்த தொடர்பு வைத்திருக்கவே விரும்புகிறோம். மேலும் இந்திய அரசு வழங்கியுள்ள சமூக இடைவெளி விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். இதன் காரணமாக நாம் பணம் அனுப்புவது மற்றும் பெறும் வழிகள் மாறியுள்ளன, தொடர்பில்லாமல் பணம் செலுத்துவது புது இயல்பாகியுள்ளது.

Advertisment

டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகளான Google Pay, PhonePe போன்றவற்றுக்கு பெரும் தேவை உள்ளது. நீங்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியை (online payments) பெரிதும் நம்பியிருந்தாலும் அதற்கென ஒரு தனி ஆப்பை உங்கள் ஸ்மார்ட் கைபேசியில் பதிவிறக்கம் செய்ய விருப்பம் இல்லையென்றால் WhatsApp Pay ஐ முயற்சி செய்து பாருங்கள்.

WhatsApp Payments குறித்தான அனைத்து தகவல்களும், மேலும் அதை பயன்படுத்தி எவ்வாறு ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை எளிதாக செய்வது என்பது குறித்தும் பார்ப்போம்.

வாட்ஸ் ஆப்: அபாரமான அடுத்தப் பாய்ச்சலுக்கு ரெடி!

WhatsApp Payments, National Payments Corporation of India’s (NCPI) Unified Payments Interface (UPI) ஐ அடிப்படையாக கொண்டது. மக்கள் பணத்தை சேமித்து வைக்க Paytmல் இருக்கும் ஒரு வேலட் (wallet) போல் அல்லாமலும், பயனர்கள் பில்களுக்கான கட்டணங்களை செலுத்த மற்றும் தங்கத்தை வாங்க உதவும் Google Pay போலல்லாமலும் WhatsApp Payments peer to peer பணம் செலுத்துவதற்காக மட்டும் அர்பணிக்கப்பட்டுள்ளது. WhatsApp Payments க்காக இந்த உடனடி செய்தியிடல் தளம் இந்தியாவில் உள்ள சில முன்னனி வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

WhatsApp Payments ஐ எவ்வாறு கட்டமைத்து உங்கள் வங்கி கணக்குடன் இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp Payments: எவ்வாறு கட்டமைக்க வேண்டும்?

publive-image

* உங்கள் ஸ்மார்ட் கைபேசியில் வாட்ஸ் ஆப்பை திறந்துக் கொள்ளவும்.

* அடுத்து மேல் வலது ஓரத்தில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.

* ‘Payments’ option என்பதை சொடுக்கவும்.

* ‘Add payment method’ விருப்ப தேர்வை இப்போது தட்டவும்.

* இது ஆதரிக்கப்படும் சாதனங்களின் (supported devices) பட்டியலைக் காண்பிக்கும்.

* உங்களது கணக்கு உள்ள வங்கியை தேர்வு செய்யவும் (வங்கி கணக்கு கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்)

* உங்கள் கைபேசியிலிருந்து ஒரு verification message ஐ அனுப்புவதற்கான அனுமதியை ஆப் கேட்கும். ‘Verify via SMS’ பொத்தானை அழுத்தவும்.

* சரிப்பார்க்கப்பட்ட பிறகு உங்களது எண்ணுடன் இணைக்கப்பட்டு வங்கியில் உங்களுக்கு உள்ள அனைத்து கணக்குகளையும் காண்பிக்கும். ஆப் பயன்படுத்த நீங்கள் கட்டமைக்க விரும்பும் ஒன்றைத் தேர்வுசெய்க.

* done என்பதை தட்டவும். உங்கள் கணக்கை கட்டமைக்கும் செயல்முறை முடிந்தது.

லாக்-டவுன் ‘கிஃப்ட்’டாக இது இருக்கட்டுமே... பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்

WhatsApp Payments பயன்படுத்தி எவ்வாறு பணத்தை அனுப்புவது?

publive-image

முறை 1:

* நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் அரட்டைக்கு (chat) செல்லவும்

* attachments option ஐ சொடுக்கி அடுத்து ‘Payment’ option ஐ சொடுக்கவும்.

* அந்த தொடர்புக்கும் (contact) WhatsApp Payments கட்டமைப்பு இருந்தால், நீங்கள் ஒரு திரையை பார்க்கலாம் அதில் பணத்தை அனுப்பவும் கோரவும் செய்யலாம்.

* தொகையை உள்ளீடு செய்து அதனுடன் ஏதாவது, குறிப்பு அனுப்ப வேண்டுமென்றால் அதையும் தட்டச்சு செய்து அடுத்து next என்பதை சொடுக்கவும்.

* அடுத்து வரும் திரை உங்களிடன் உங்கள் UPI pin ஐ உள்ளீடு செய்ய சொல்லும். உங்களிடம் அது இல்லை என்றால் அதை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு அது வழிகாட்டும்.

* UPI pin ஐ உள்ளீடு செய்துவிட்டால் முடிந்துவிட்டது.

* நீங்கள் பணத்தை கோரினால், request என்பதை தட்டவும் அந்த நபர் உங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை காத்திருக்கவும்.

முறை 2:

publive-image

* வாட்ஸ் ஆப் (WhatsApp) முகப்பு பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டி payments option ஐ திறக்கவும்.

* உங்கள் பெயரின் அடுத்து காண்பிக்கப்படும் QR code ஐ தட்டி அதை பயன்படுத்தி மக்கள் உங்களுக்கு பணத்தை அனுப்பலாம்.

* திரையின் கீழ் வலதுபுறத்தில் அமைந்துள்ள new payment option ஐ தட்டவும்.

* ஒரு தொடர்பை தேர்வு செய்யவும் அல்லது Send to a UPI ID ஐ தேர்வு செய்யவும் அல்லது Scan QR code option தேர்வு செய்யவும்.

* மீதமுள்ள செயல்முறை மேலே உள்ளது போலவே.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whats App
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment