Advertisment

நீங்கள் வாட்ஸ்அப் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா? வருகிறது புது அப்டேட்!

வாட்ஸ்அப் 'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' ஆப்ஷன் நிர்வகிக்கும் வகையில் புது அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீங்கள் வாட்ஸ்அப் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா? வருகிறது புது அப்டேட்!

வாட்ஸ்அப் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். இது பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதால் அனைவரும் பயன்படுத்துகின்றனர். தகவல்ளை மற்றவர்களுக்கு எளிதில் சேர் செய்யவும் முடிகிறது.

Advertisment

பயனர்கள் தேவைக்கு ஏற்ப புது புது அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது. அப்டேட் செய்து வருகிறது. அதேவேளையில் பயனர்களின் பிரைவசி அம்சத்திலும் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் 'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' ஆப்ஷன் நிர்வகிக்கும் வகையில் புது வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது நாம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது மற்றவர்களும் வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், சேட் பக்கத்தில் 'Online'என்று காண்பிக்கும். அதன் மூலம் நாம் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிய வரும்.

இந்தநிலையில் இந்த 'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' நிர்வகிக்கும் வகையில் புது அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. இதில் நமது ஆன்லைன் ஸ்டேட்டஸ் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்றால் மறைத்து வைக்கலாம். தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புது அம்சம்

'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' ஆப்ஷன் நிர்வகிக்கும் ஆப்ஷனை பயன்படுத்த முதலில் வாட்ஸ்அப் செட்டிங்கிஸ் செல்ல வேண்டும். அதில் பிரைவசி ஆப்ஷன் செலக்ட் செய்து அதில், அக்கவுண்ட் பக்கம் கொடுத்து ‘Last seen and online’ ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

Last seen and online கீழ் 2 ஆப்ஷகள் கொடுக்கப்பட்டிருக்கும். ‘Everyone’ மற்றும் ‘same as last seen’ கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ‘same as last seen’ கொடுக்க வேண்டும். அதாவது உங்களின் last seen யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் 'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' பார்க்க முடியும்.

இருப்பினும் இந்த வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.20.9, v2.22.20.7 மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வசதி அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment