Advertisment

இனி இந்த ஐபோன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. என்ன செய்ய வேண்டும்?

அக்டோபர் மாதத்திலிருந்து பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
இனி இந்த ஐபோன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. என்ன செய்ய வேண்டும்?

அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஐஓஎஸ் சாப்ட்வேர் உள்ள ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது என WABetaInfo தெரிவித்துள்ளது. ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 வெர்ஷனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த பயனர்கள் தங்கள் ஐபோன்களைப் புதுப்பிக்க வேண்டும், அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஏன் செயல்படாது?

ஐபோன் நிறுவனம் அடுத்தடுத்து புது ஐஓஎஸ் வெர்ஷன் மற்றும் போன்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டும். பழைய ஐஓஎஸ் வெர்ஷன்கள் குறைந்த அளவிலான பயனர்களே பயன்படுத்துவதால் அவர்கள் சமீபத்திய ஐஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த ஐபோன்களில் செயல்படாது?

ஐஓஎஸ் 16 வெர்ஷன் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது ஐஓஎஸ் 14 மற்றும் 15 பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவன அறிவிப்பால் அதிக பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5s மாடல்களில் தான், ஐஓஎஸ் 10, 11 வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. எனவே, இந்தப் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த சமீபத்திய ஐஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஐஓஎஸ் அப்பேட் செய்வது எப்படி?

ஐஓஎஸ் அப்பேட் செய்ய உங்கள் போனில், செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று General ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும். பின், Software Update ஆப்ஷன் கொடுத்து, புது அப்டேட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment