Advertisment

WhatsApp New Updates : இந்த அப்டேட்டுகளுக்காகத் தான் இத்தனை நாளா வெய்ட்டிங்...!

5 New and Upcoming Features of WhatsApp : தற்போது அந்த ஸ்டேட்டஸ் ஃபீடினை முழுவதுமாக எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளது வாட்ஸ்ஆப்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரூப் சாட் தொல்லையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் அப்டெட்!

Top WhatsApp Upcoming Features 2019 : உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி வாட்ஸ்ஆப் ஆகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது வாட்ஸ் ஆப். அப்படியே தற்போது வெளியாக இருக்கும் ஐந்து முக்கிய அப்டேட்கள் ஒரு பார்வை.

Advertisment

WhatsApp Upcoming FeaturesDark Mode (டார்க் மோட்)

ஏற்கனவே ட்விட்டர் மற்றும் யூட்யூபில் இருக்கும் இந்த வசதியை வெகுநாட்களாக வாட்ஸ்ஆப்பில் கொண்டு வர திட்டம் தீட்டியவாறே இருக்கிறது இந்நிறுவனம், இரவு நேரங்களில் கண்களுக்கு அதிக வலி தராமல் இருக்கும் வகையில் இந்த் டார்க் மோட் வடிவமைக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப்.

Quick Edit Media (குயிக் எடிட் மீடியா)

தற்போது இருக்கும் இமேஜ் எடிட்டிங்குகளுக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். பீட்டா வெர்ஷனில் காணக்கிடைக்கும் இந்த அப்டேட் நேரடியாக சாட் டேப்பில் இருந்தே ஒரு மீடியா ஃபைலை எடிட் செய்து மாற்றி அனுப்பிக் கொள்ளலாம்.

More forwarded info (ஃபார்வர்ட் இன்ஃபோ)

நம்மைச் சுற்றி பரப்பப்பட்டு வரும் போலி செய்திகளை அடையாளம் காண ஃபார்வர்டெட் இன்ஃபோ என்ற டேக் தற்போது வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. வர இருக்கும் புதிய அப்டேட்டில் உங்களுக்கு வரும் செய்தி எத்தனை முறை ஃபார்வர்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : மலிவு விலை பட்ஜெட் போனில் புதிதாக சேர்ந்த ஹானர் ப்ளே 8!

QR code (க்யூ.ஆர். கோட்)

QR code மூலமாக வாட்ஸ்ஆப்பில் புதிய காண்டாக்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளும் வசதியை தற்போது வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமின் nametags போலவே இவையும் செயல்படும். ஏற்கனவே வாட்ஸ்ஆப் வெப்பில் QR code பயன்படுத்தும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hide muted status (ஹைட் ம்யூட்டட் ஸ்டேட்டஸ்)

முகநூலில் எப்படி அன்ஃபாலோ என்ற ஒரு ஆப்சன் உள்ளதோ அதே போன்று வாட்ஸ்ஆப்பில் ஹைட் ம்யூட்டட் ஸ்டேட்டஸ் என்ற ஒரு ஆப்சன் உள்ளது. ஒரு காண்டாக்ட்டினை மியூட் செய்தால் உடனே அவர்களின் ஸ்டேட்டஸ் கீழே சென்றுவிடும். ஆனால் ஒருவரால் அந்த ஸ்டேட்டஸ்களை பார்க்க இயலும். தற்போது அந்த ஸ்டேட்டஸ் ஃபீடினை முழுவதுமாக எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளது வாட்ஸ்ஆப்

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment