வாட்ஸ்அப் செயலி, வாட்ஸ்அப் வெப் என இரண்டு உள்ளது. வாட்ஸ்அப் செயலி போனில் பயன்படுத்தப்படும். வாட்ஸ்அப் வெப் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதுபுது வசதிகளை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில், வாட்ஸ்அப் வெப்பில் ‘filter by unread’ ஆப்ஷன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் சேட் பக்கத்தில் நாம் படிக்காமல் நிறைய மெசேஜ் வைத்திருப்போம். அதை நாம் முதலில் படிப்பதற்கு எளிதாக பில்டர் செய்து காண்பிக்கும் ஆப்ஷன் ஆகும்.
அந்த ஆப்ஷனை ஆன் செய்தால், நாம் படிக்காமல் வைத்திருக்கும் மெசேஜ் மட்டும் காண்பிக்கும். இந்த வசதி மேக்புக் லேப்டாப் மற்றும் விண்டோஸ் லேப்டாப் என இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் வெப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். ‘Search or Start new chat’ பாக்ஸ் பக்கத்தில், வலப்புறத்தில் உள்ள மூன்று லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘filter by unread’ ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால், ‘unread chats’ஆப்ஷன் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
இந்த வசதி குறிப்பாக அதிக குரூப்பில் உள்ளீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமான நபருக்கு மெசேஜ் செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். எளிதாக மெசேஜ் படித்து அனுப்புவதற்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெயில் மூலம் linked devices கொண்டு நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்வது போல், வாட்ஸ்அப்பிலும் அந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil