வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: அழித்தவற்றை மீண்டும் கொண்டு வரலாம்.. ஜாலி ஜாலி!!

ஃபோன் கேலரியில் சென்று அது சேமிக்கப்பட்டிந்தால் அதை எடுக்க வாய்ப்புக்கள் அதிகம்.

வாட்ஸ் அப் செயலி, யூசர்களை கவரும் வகையில்,  கூடிய விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய சமூக வலைதளங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ஃபோன்களை வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஒருவரை கூட இன்றைய தொழில் நுட்ப உலகில் பார்ப்பது கடினமாக மாறி வருகிறது. அறிவியல் முன்னேற்றங்கள், புதிய கண்டுப்பிடிப்புகள் மனிதர்களை தொழில் நுட்பத்திற்கு அடிமையாக மாற்றி வருகிறது.

இதில், முக்கிய பங்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவற்றையே சாரும். இதில், வாட்ஸ் அப் செயலி உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. நொடி பொழுதில் நமது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய தகவலை மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால் என எந்த வகையில் வேண்டுமானாலும் தெரிய படுத்தலாம். அதனுடன், குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வாய்ஸ் சேட்டிங் என பல வசதிகள் யூசர்களை கவர, அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இப்போது இயங்கி வரும் வாட்ஸ் அப் செயலியில்,  நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனுப்பிய  புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பார்த்து விட்டு அதை அப்போதே அழித்து விட்டால் அதை வாட்ஸ் அப்பில் மீண்டும் திரும்ப பெற முடியாது.  ஃபோன் கேலரியில் சென்று அது சேமிக்கப்பட்டிந்தால் அதை எடுக்க வாய்ப்புக்கள் அதிகம்.

ஆனால்.  வாட்ஸ் அப்பில் டெலிட்  செய்து விட்டால் அதை திரும்ப பெறுவது சாத்தியமில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் அது சாத்தியம் என்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதாவது யூசர்கள் இனிமேல் வாட்ஸ் அப்பில் டெலிட் செய்தவற்றை திரும்ப எடுக்க முடியும்,

இந்த அப்டேட்டிற்கான  சோதனை  தற்போது வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்ஷனில்  நடைப்பெற்று வருகிறது. கூடிய விரைவில் இதன் அப்டேட்டை யூசர்கள் வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close